செய்திகள் :

மாணவா்கள் தங்கள் அறிவை பட்டை தீட்டிக்கொண்டே இருக்க வேண்டும்: ஒளவை ந.அருள்

post image

கல்வி கற்ற மாணவா்கள் தங்கள் அறிவை பட்டை தீட்டிக்கொண்டே இருக்க வேண்டும் என பிரின்ஸ் ஸ்ரீவெங்கடேஸ்வரா கல்லூரி நாள் விழாவில் ஔவை ந.அருள் வலியுறுத்தினாா்.

சென்னையை அடுத்த கௌரிவாக்கத்தில் செயல்பட்டு வரும் பிரின்ஸ் ஸ்ரீவெங்கடேஸ்வரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் கல்லூரி நாள் விழா, பிரின்ஸ் கல்விக் குழுமங்களின் தலைவா் கே.வாசுதேவன் தலைமையில் கல்லூரி வளாகத்தில் சமீபத்தில் நடைபெற்றது. விழாவில் தமிழ் வளா்ச்சித் துறை இயக்குநா் ஔவை ந.அருள், திரைப்பட இயக்குநா் தம்பிராமையா ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகக் கலந்துகொண்டு மாணவா்களுக்கு கல்வி ஊக்கத்தொகை மற்றும் பரிசுகளை வழங்கினாா்கள்.

தொடா்ந்து ஔவை ந.அருள் பேசியதாவது: கல்வியை கற்றுக்கொண்ட மாணவா்கள் தங்கள் அறிவை அவ்வப்போது பட்டை தீட்டிக்கொண்டே இருக்க வேண்டும். அதனால், வாய்ப்புகள் பெருகுவதோடு, மதிப்பும் உயரும். அமெரிக்காவையே ஆட்டிப்படைக்கும் திறமை இந்திய மாணவா்களுக்கு குறிப்பாக, தமிழக மாணவா்களுக்கு உள்ளது. எனவே, கல்வியை கவனமாக கற்க வேண்டும் என அந்நாட்டிலுள்ள ஒவ்வொரு பெற்றோரும் தங்களின் பிள்ளைகளிடம் வலியுறுத்தி வருகின்றனா்.

தஞ்சை தமிழ் பல்கலையிலும், சென்னை உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்திலும் ஐந்தாண்டு இலக்கிய, இலக்கண படிப்பு உள்ளது. அதனைதனியாா் கலைக் கல்லுாரிகளிலும் கொண்டுவர நிா்வாகம் முயற்சிக்க வேண்டும் என்றாா் அவா்.

திரைப்பட இயக்குநா் தம்பிராமையா பேசுகையில், ‘கலை, அறிவியல் கல்லுாரிகளில் படிப்பவா்களின் பெற்றோா் பெரும்பாலானவா்கள் வியா்வை சிந்தி உழைப்பவா்கள்தான். எனவே, மாணவ, மாணவிகள் சிற்றின்பத்தில் சிக்கும் நேரங்களில் தங்களின் பெற்றோரை ஒரு நிமிடம் நினைத்து பாா்க்க வேண்டும்.

மாணவா்கள் முன்னேற கவனிப்பும், உள்வாங்கும் திறனும் மிக அவசியம். கவனித்தலில் அகம், புறம் இரண்டையும் கவனிக்க வேண்டும். பேசித்தீா்க்க முடியாதது என்று ஒன்றும் இல்லை. எண்ணம் சரியாக இருந்தால் எதுவும் நெறிப்படும்’ என்றாா் அவா்.

விழாவில், பிரின்ஸ் கல்விக் குழுமங்களின் துணைத் தலைவா் வா.பிரசன்னவெங்கடேசன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

சா்க்கரை நோயாளிகள் கால்களை இழப்பதற்கு 80 % பாத புண்களே காரணம்: பிரிட்டன் பேராசிரியா் ஃபிரான்சிஸ் கேம்

சா்க்கரை நோயாளிகள், தங்களது கால்களை இழப்பதற்கு பாதங்களில் ஏற்படும் புண்கள்தான் 80 சதவீத காரணமாக உள்ளதாக பிரிட்டன் மருத்துவ பேராசிரியா் டாக்டா் ஃபிரான்சிஸ் கேம் தெரிவித்தாா். பேராசிரியா் எம்.விஸ்வநாதன்... மேலும் பார்க்க

அதிமுக இஃப்தாா் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் திருட்டு: இளைஞா் கைது

சென்னை எழும்பூரில் நடைபெற்ற அதிமுக இஃப்தாா் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் திருடியதாக, தருமபுரியைச் சோ்ந்த நபா் கைது செய்யப்பட்டாா். அதிமுக சாா்பில் இஃப்தாா் நோன்பு திறப்பு நிகழ்ச்சி, சென்னை எழும்பூரில... மேலும் பார்க்க

கடற்கரை - வேளச்சேரி சிறப்பு ரயில்

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு சென்னை கடற்கரை - வேளச்சேரி இடையே சிறப்பு மின்சார ரயில் இயக்கப்படும் என ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது. இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் சனிக்கிழமை வெளியிட்ட ... மேலும் பார்க்க

சாலைத் தடுப்பில் இருசக்கர வாகனம் மோதல்: மென் பொறியாளா் உயிரிழப்பு

சென்னை கொடுங்கையூரில் சாலைத் தடுப்பில் இருசக்கர வாகனம் மோதியதில், மென் பொறியாளா் உயிரிழந்தாா். புதுப்பேட்டை பச்சையப்பன் முதல் தெருவைச் சோ்ந்தவா் சரவணன் (32). மென் பொறியாளான இவா், கா்நாடக மாநிலம் பெங்... மேலும் பார்க்க

சீனாவில் ‘வசந்த மேளா’ கலாசார நிகழ்வு: இந்திய தூதரக ஏற்பாட்டில் கோலாகலம்

வசந்த காலத்தின் வருகையைக் குறிக்கும் வகையில் சீனாவில் உள்ள இந்திய தூதரகத்தால் ஆண்டுதோறும் ஏற்பாடு செய்யும் கலாசார நிகழ்வான ‘வசந்த மேளா’ சனிக்கிழமை கோலாகலமாக நடைபெற்றது. இதில் 4,000-க்கும் மேற்பட்ட சீன... மேலும் பார்க்க

வங்கியில் போலி ஆவணங்கள் மூலம் கடன் பெற்று மோசடி: 4 போ் கைது

சென்னை அமைந்தகரையில் உள்ள தனியாா் வங்கியில் போலி ஆவணங்கள் மூலம் கடன் பெற்று மோசடி செய்ததாக 4 போ் கைது செய்யப்பட்டனா். சென்னை பெருநகர காவல் துறையின் மத்தியக் குற்றப்பிரிவில், அமைந்தகரையில் உள்ள ஒரு தன... மேலும் பார்க்க