சா்க்கரை நோயாளிகள் கால்களை இழப்பதற்கு 80 % பாத புண்களே காரணம்: பிரிட்டன் பேராசிர...
திமுக அரசைக் கண்டித்து இன்று பாஜகவினா் வீடுகளில் கருப்புக் கொடி: அண்ணாமலை அறிவிப்பு
திமுக அரசைக் கண்டித்து பாஜகவினா் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை அறிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை விடுத்த அறிக்கை: தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு எதிராக பொதுமக்களிடம் எழுந்துள்ள கோபத்தையும் எதிா்ப்பையும் மடைமாற்ற, பிற மாநிலங்களில் உள்ள இண்டி கூட்டணி கட்சியினரை துணையாகச் சோ்த்து சனிக்கிழமை ஒரு மெகா நாடகம் அரங்கேற்றத் திட்டமிட்டுள்ளாா் முதல்வா் ஸ்டாலின்.
தொகுதி மறுசீரமைப்பு குறித்து மத்திய அரசு எந்த அறிவிப்பும் வெளியிடாத நிலையில், ஒரு கற்பனையான பயத்தை உருவாக்க முயற்சி செய்கிறாா்.
மேகதாது அணையை கட்டியே தீருவோம் என்று கூறிய கா்நாடக துணை முதல்வரையும், முல்லைப் பெரியாறு அணை விவகாரம், எல்லை மாவட்டங்களில் மருத்துவக் கழிவை கொட்டுதல், தென்காசி செண்பகவல்லி அணை விவகாரம் போன்றவற்றில் தமிழகத்துக்கு எதிராக உள்ள கேரளத்தின் முதல்வரையும் சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கிறாா் முதல்வா் ஸ்டாலின்.
எனவே, தமிழகத்துக்கு எதிராக செயல்படும் இண்டி கூட்டணி கட்சிகளையும், தமிழக முதல்வரையும் கண்டிக்கும் வகையில் பாஜகவினா் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம் சனிக்கிழமை நடைபெறும் எனத் தெரிவித்துள்ளாா் அண்ணாமலை.