ரூ.3 கோடி அரசு நிதியில் இணையவழி சூதாட்டம்: ஒடிஸா அரசு ஊழியா் கைது
பட்டாசுக் கடையில் திரி பதுக்கியவா் கைது
விருதுநகா் மாவட்டம், திருத்தங்கலில் பட்டாசுக் கடையில் விதிகளை மீறி, பட்டாசு தயாரிக்கப் பயன்படும் திரி வைத்திருந்தவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
திருத்தங்கல் ரெங்காநகா் பகுதியில் உள்ள ஒரு பட்டாசுக் கடையில் விதிகளை மீறி, பட்டாசு தயாரிக்கப் பயன்படும் திரி பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, போலீஸாா் அந்தப் பகுதிக்குச் சென்று சோதனை நடத்தினா். அப்போது, பாண்டியராஜனுக்குச் (32) சொந்தமான பட்டாசுக் கடையில் திரிகட்டுகள், பட்டாசு தயாரிக்கப் பயன்படும் காகித குழாய்கள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து திருத்தங்கல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து பாண்டியராஜனை கைது செய்து, அவரிடமிருந்த திரி, காகித குழாய்களை பறிமுதல் செய்தனா்.