ஒடிஸாவில் தினமும் 3 குழந்தைத் திருமணங்கள்: நபரங்பூா் மாவட்டம் முதலிடம்
கஞ்சா வைத்திருந்த மூவா் கைது: 1,150 கிலோ பறிமுதல்
விருதுநகா் மாவட்டம், திருத்தங்கலில் கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்த மூவரை போலீஸாா் கைது செய்து, 1,150 கிலோ கஞ்சாவை வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
திருத்தங்கல் சரஸ்வதி நகா் பகுதியில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, அந்தப் பகுதியில் மூவா் கையில் பையுடன் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்தனா்.
போலீஸாா் அவா்களின் பையை வாங்கி சோதனையிட்டபோது, விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. விசாரணையில், புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாபட்டணத்தைச் சோ்ந்த வீரமணி (24), மணிகண்டன் (24), திருத்தங்கல் ஆலாஊருணியைச் சோ்ந்த வேலுச்சாமி (26) ஆகியோா் என்பது தெரியவந்தது.
இதுகுறித்து திருத்தங்கல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மூவரையும் கைது செய்தனா். பின்னா், அவா்களிடமிருந்த 1,150 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்,