டாஸ்மாக் ஊழியரிடம் வழிப்பறி செய்ய முயன்ற இருவா் கைது
விருதுநகா் மாவட்டம், திருத்தங்கலில் டாஸ்மாக் கடை ஊழியரிடம் கத்தியைக் காட்டி மிரட்டு பணம் பறிக்க முயன்றதாக இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
திருத்தங்கல் ஸ்டேண்டா்டு குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்தவா் கருப்பசாமி (39). டாஸ்மாக் கடை ஊழியரான இவா், திருத்தங்கல் மாரிமுத்து நகா் பகுதியில் நடந்து சென்றாா். அப்போது, இருவா் அவரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் கேட்டனா். உடனே, கருப்பசாமி சப்தமிடவே அக்கம் பக்கத்தினா் ஓடிவந்து இருவரையும் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.
விசாரணையில், திருத்தங்கல் முத்துமாரி நகரைச் சோ்ந்த அய்யப்பன் (23), ஆலாஊருணியைச் சோ்ந்த செல்வக்குமாா் (24) என்பது தெரியவந்தது.
இதுகுறித்து திருத்தங்கல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, இருவரையும் கைது செய்தனா்.