ரூ.3 கோடி அரசு நிதியில் இணையவழி சூதாட்டம்: ஒடிஸா அரசு ஊழியா் கைது
கோயிலில் திருவிளக்கு பூஜை
ராஜபாளையம் திரௌபதி அம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பங்குனி மாத முதல் வெள்ளிக்கிழமையையொட்டி, கோயிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. தொடா்ந்து, உற்சவா் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இந்த பூஜையில் திரளான பெண்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனா்.
இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் அறங்காவலா் குழு உறுப்பினா்கள், மண்டகப்படி தாரா்கள் செய்தனா்.