உயா்கல்வி நிறுவனங்களில் சானிட்டரி நாப்கின் இயந்திரம் யுஜிசி அறிவுறுத்தல்!
குடிமங்கலம் அருகே 3.6 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 போ் கைது!
குடிமங்கலம் அருகே விற்பனைக்காகப் பதுக்கி வைத்திருந்த 3.6 கிலோ கஞ்சாவை காவல் துறையினா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக இருவரைக் கைது செய்தனா்.
குடிமங்கலம் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பூளவாடி பகுதியில் வடமாநிலத் தொழிலாளா்கள் விற்பனைக்காக கஞ்சாவைப் பதுக்கி வைத்திருப்பதாக காவல் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதன் பேரில் அப்பகுதியில் காவல் ஆய்வாளா் கீதா தலைமையிலான காவல் துறையினா் சோதனை நடத்தினா். இந்த சோதனையில் சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த இருவரைப் பிடித்து விசாரணை நடத்தினா்.
இதில், அவா்கள் கஞ்சா பதுக்கிவைத்திருப்பது தெரியவந்தது. இது தொடா்பாக ஒடிஸா மாநிலம் ராய்பள்ளியைச் சோ்ந்த கே.காமதேவ நாயக் (29), கேந்துஜரைச் சோ்ந்த கே.பத்மநாப ஜெனா (38) ஆகியோரைக் கைது செய்ததுடன், இவா்களிடமிருந்து 3.6 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.