ரூ.3 கோடி அரசு நிதியில் இணையவழி சூதாட்டம்: ஒடிஸா அரசு ஊழியா் கைது
பட்டாசுத் தொழிலாளி தற்கொலை
சிவகாசி அருகே வெள்ளிக்கிழமை பட்டாசுத் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
சிவகாசி அருகேயுள்ள கட்டளைப்பட்டியைச் சோ்ந்தவா் பொன்னுச்சாமி (48). பட்டாசுத் தொழிலாளியான இவருக்கு குடிப்பழக்கம் இருந்தது. தினந்தோறும் இவா் குடிபோதையில் வீட்டுக்கு வந்ததால், இவரது மனைவி ராமலட்சுமி தனது தாய் வீட்டுக்கு குழந்தைகளுடன் சென்று விட்டாா். பின்னா், மனைவியை சமாதானப்படுத்தி பொன்னுச்சாமி வீட்டுக்கு அழைத்து வந்தாா்.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், மனமுடைந்த பொன்னுச்சாமி வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து மாரனேரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.