ரூ.3 கோடி அரசு நிதியில் இணையவழி சூதாட்டம்: ஒடிஸா அரசு ஊழியா் கைது
கஞ்சா விற்ற இளைஞா் கைது
வத்திராயிருப்பு அருகே கஞ்சா விற்றதாக இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
வத்திராயிருப்பு அருகேயுள்ள சுந்தரபாண்டியம் பகுதியில் கிருஷ்ணன்கோவில் காவல் உதவி ஆய்வாளா் ராஜா தலைமையிலான போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.
அப்போது, அரசு மேல்நிலைப் பள்ளி அருகே இரு சக்கர வாகனத்தில் வைத்து கஞ்சா விற்பனை செய்த கதிரேசனை (26) போலீஸாா் கைது செய்தனா். பின்னா், கஞ்சா, இரு சக்கர வாகனத்தை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.