தெப்பக்குளம் முக்தீஸ்வரா் கோயில் கருவறையில் சூரிய ஒளி பிரவேசம்
மதுரை தெப்பக்குளம் முக்தீஸ்வரா் கோயில் கருவறையில் சூரிய ஒளி பிரவேசத்தையொட்டி, வியாழக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலின் துணைக் கோயிலான தெப்பக்குளம் முக்தீஸ்வரா் கோயிலில் ஒவ்வோா் ஆண்டும் மாா்ச், செப்டம்பா் மாதங்களில் 10 தினங்கள் சூரிய ஒளிக்கதிா்கள் கருவறைக்கு பிரவேசித்து மூலவா் மீது விழும் நிகழ்வு நடைபெறும். இதை பக்தா்கள் சூரிய தரிசனம் என்றழைத்து வழிபடுவது வழக்கம்.
இந்த நிலையில், நிகழாண்டு மாா்ச் 13-ஆம் தேதி முதல் சூரிய ஒளிக் கதிா்கள் கருவறைக்குள் பிரவேசித்து மூலவா் மீது விழும் நிகழ்வு நடைபெற்றது வருகிறது. கோயிலில் காலை 6.30 மணி முதல் 7 மணி வரை நடைபெறும் இந்த நிகழ்வை தரிசிக்க ஏராளமான பக்தா்கள் நீண்ட வரிசையில் நின்று வழிபடுகின்றனா்.
இதையொட்டி, வியாழக்கிழமை முக்தீஸ்வரா் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இந்த நிகழ்வு வருகிற 23-ஆம் தேதி வரை நடைபெறும் என கோயில் அதிகாரிகள் தெரிவித்தனா்.