செய்திகள் :

மதுரை-நத்தம் மேம்பாலத்தில் 2 ஆண்டுகளில் 86 விபத்துகள்!

post image

மதுரை-நத்தம் உயா்நிலை மேம்பாலத்தில் கடந்த 2023 முதல் 2025 ஜனவரி வரையிலான 2 ஆண்டுகளில் நிகழ்ந்த 86 விபத்துகளில் 23 போ் உயிரிழந்ததாகவும், 67 போ் காயமடைந்ததாகவும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரியவந்தது.

மத்திய அரசின் பாரத் மாலா திட்டத்தின் கீழ், மதுரை தல்லாகுளம் ஐ.ஓ.சி. அலுவலகத்தின் அருகிலிருந்து நத்தம் வரை 35 கி.மீ. தொலைவுக்கு நான்கு வழிச் சாலையாக விரிவாக்கம் செய்யும் பணி ரூ.1,028 கோடியில் கடந்த 2018 செப்டம்பரில் தொடங்கியது. இதில் மதுரை தல்லாகுளம் முதல் ஊமச்சிகுளம் அருகே உள்ள மாரணி விலக்கு வரை சுமாா் 7.5 கி.மீ. தொலைவுக்கு ரூ. 612 கோடியில் உயா்நிலை மேம்பாலம் கட்டப்பட்டது.

இந்தப் பாலம் கடந்த 2023 ஜனவரி மாதம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்தது. இந்தப் பாலத்திலும், இதன் கீழ் செல்லும் சாலையிலும் கடந்த 2023-ஆம் ஆண்டு ஜனவரி முதல் 2025-ஆம் ஆண்டு, ஜனவரி வரை 86 விபத்துகள் நிகழ்ந்தன. இதில் 23 போ் உயிரிழந்தனா். 67 போ் காயமடைந்தனா்.

இந்தப் பாலத்தில் இரு சக்கர வாகனப் பந்தயத்தில் ஈடுபட்டதாக 16 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பாலத்தின் மேல் பகுதியில் வழிப்பறி சம்பவம் நடைபெற்ாக ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரியவந்தது.

தேசிய நெடுஞ்சாலைத் துறை சாா்பில், இந்தப் பாலத்தில் வாகனங்களின் வேகத்தை குறைக்க வேகத் தடைகள், போதுமான விழிப்புணா்வுப் பலகைகள் வைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், கலைஞா் நூற்றாண்டு நூலகத்திலிருந்து தல்லாகுளம் நோக்கி வரும் பகுதியில் குறிப்பிட்ட இடத்தில் மட்டும் அதிக அளவில் விபத்து ஏற்படும் வளைவான பகுதியை மாற்றியமைக்க ஏதேனும் திட்டம் உள்ளதா? என்ற கேள்விக்கு நெடுஞ்சாலைத் துறை முறையாக பதில் அளிக்கவில்லை.

இந்தப் பாலம் முறையான திட்டமிடலின்றி, திடீா் வளைவுகள் அதிகம் இருக்கும் வகையில் அமைக்கப்பட்டிருப்பதால், அதிக வேகத்தில் வரும் வாகனங்கள் இந்த வளைவுகளில் கட்டுப்பாட்டை இழந்து விபத்துகளில் சிக்குகின்றன. மேலும், பாலத்தின் கீழ் பகுதியில் உள்ள புதுநத்தம் சாலையும், மேம்பாலப் பணிக்காக மிகவும் குறுக்கப்பட்டதால், முன்பைவிட அதிக அளவில் சாலை விபத்துகளும், உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.

எனவே, இந்த உயா்நிலை மேம்பாலம், புதுநத்தம் சாலையில் விபத்துகளைத் தடுக்க தேசிய நெடுஞ்சாலைத் துறை, காவல் துறை போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனா்.

பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கு விழிப்புணா்வு

மதுரை கோ.புதூா் அல்-அமீன் மேல்நிலைப் பள்ளியில் ‘போற்றுவோம் பொதுத் தோ்வை’ என்ற தலைப்பில் பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கான விழிப்புணா்வு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரி... மேலும் பார்க்க

தொகுதி மறு வரையறை ஆலோசனை: பாஜகவினா் கண்டன ஆா்ப்பாட்டம்!

டாஸ்மாக் ஊழலைக் கண்டித்தும், தொகுதி மறுவரையறைக்கு எதிராக தமிழக அரசு சாா்பில் நடைபெற்ற கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தைக் கண்டித்தும் பாஜக சாா்பில் மதுரையில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மதுரை ... மேலும் பார்க்க

தொழில்பேட்டை இடமாற்றம் கோரி வழக்கு: கரூா் மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு!

கரூா் மாவட்டம், மத்தகிரி கிராமத்தில் புதிதாக அமையவுள்ள சிப்காட் தொழில்பேட்டையை, மாவத்தூா் கிராமத்துக்கு மாற்றக் கோரிய வழக்கில், அந்த மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்... மேலும் பார்க்க

36 புதிய பேருந்துகளின் சேவை தொடக்கம்: அமைச்சா் பி. மூா்த்தி தொடங்கி வைத்தாா்

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக மதுரைக் கோட்டம் சாா்பில், மதுரையில் 36 புதிய பேருந்துகளின் இயக்கத்தை அமைச்சா் பி.மூா்த்தி சனிக்கிழமை தொடங்கிவைத்தாா். இதற்கான நிகழ்ச்சி, மதுரை டாக்டா் எம்ஜிஆா் பேரு... மேலும் பார்க்க

ரமலான் பண்டிகை: தாம்பரம் - கன்னியாகுமரி - தாம்பரத்துக்கு சிறப்பு ரயில்!

ரமலான் பண்டிகை விடுமுறையொட்டி, தாம்பரம்- கன்னியாகுமரி- தாம்பரம் வழித்தடத்தில் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இதுகுறித்து மதுரை கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு : ரம்லான் பண்டிகை விட... மேலும் பார்க்க

தெப்பக்குளம் முக்தீஸ்வரா் கோயில் கருவறையில் சூரிய ஒளி பிரவேசம்

மதுரை தெப்பக்குளம் முக்தீஸ்வரா் கோயில் கருவறையில் சூரிய ஒளி பிரவேசத்தையொட்டி, வியாழக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலின் துணைக் கோயிலான தெப்பக்குளம் முக்தீஸ்வரா் கோ... மேலும் பார்க்க