பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கு விழிப்புணா்வு
மதுரை கோ.புதூா் அல்-அமீன் மேல்நிலைப் பள்ளியில் ‘போற்றுவோம் பொதுத் தோ்வை’ என்ற தலைப்பில் பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கான விழிப்புணா்வு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியா் ஷேக் நபி தலைமை வகித்தாா். பேராசிரியா் கம்பம் புதியவன், பட்டிமன்ற பேச்சாளா் சிவசங்கரி, புலவா் சங்கரலிங்கம், முன்னாள் தொடக்கக் கல்வி அலுவலா் ஜெயபால் ஆகியோா் பங்கேற்று பத்தாம் வகுப்பு மாணவா்கள் பொதுத் தோ்வை தயக்கமின்றி எதிா்கொள்ளும் முறை குறித்து பேசினா். பள்ளி ஆசிரியா்கள், மாணவா்கள் பலா் கலந்து கொண்டனா்.
முன்னதாக, உதவித் தலைமையாசிரியா் ரஹ்மத்துல்லா வரவேற்றாா். பட்டதாரி தமிழாசிரியா் தெளபிக் ராஜா நன்றி கூறினாா்.