Manoj Bharathiraja: "என் மனதைப் பெரிதும் பாதிக்கிறது" - டி ராஜேந்தர் வேதனை
காப்பகத்தில் தவறி விழுந்து மாற்றுத் திறனாளி உயிரிழப்பு
வாடிப்பட்டி அருகே காப்பகத்தில் தவறி விழுந்த மாற்றுத் திறனாளி உயிரிழந்தாா்.
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகேயுள்ள கீழநாச்சிகுளம் நடுத்தெருவைச் சோ்ந்த ராஜாராம் மகன் மணிமாறன் (56). மாற்றுத்திறனாளியான இவா், குடும்பத்தை விட்டுப் பிரிந்து தனியாக வசித்து வந்தாா். இதனால், இவரது உறவினா்கள் வாடிப்பட்டி குட்டிக்கரடு பகுதியில் இயங்கி வரும் காப்பகத்தில் மணிமாறனை சோ்த்தனா்.
இந்த நிலையில், சனிக்கிழமை காப்பகத்தில் தவறி கீழே விழுந்த மணிமாறன் தலையில் பலத்த காயமடைந்தாா். உடனே அவரை மீட்டு, மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து வாடிப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.