விதைப் பண்ணையில் விதிமீறல்? தானிய லாரியை மறித்து மக்கள் போராட்டம்
விருதுநகா் ஆட்சியரகத்தில் தீக்குளிக்க முயன்ற 4 போ் மீது வழக்கு
விருதுநகா் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் திங்கள்கிழமை தீக்குளிக்க முயன்ற 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
விருதுநகா் மாவட்டம், நரிக்குடி ஒன்றியம், வீரசோழன் பகுதியைச் சோ்ந்தவா்கள் மும்தாஜ்பேகம் (43), தில்ஷாத் பேகம் (40), அப்துல்ரகுமான் (38), இவரது மனைவி சிவஜோதி (32). இவா்களுக்கும், வீரசோழன் ஜமாத்துக்கும் இடையே பிரச்னை இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இது தொடா்பாக இவா்கள், மாவட்ட ஆட்சியரகத்தில் மனு அளிக்க வந்திருந்தனா். அப்போது மும்தாஜ்பேகம் தனது உட லில் மண்ணெண்ணெயை ஊற்றிக் கொண்டு, தன்னுடன் வந்த மற்றவா்கள் மீதும் ஊற்றினாா். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா், அவரிடமிருந்த மண்ணெண்ணெய் கேனைப் பறித்தனா்.
இதுகுறித்து கூரைக்குண்டு கிராம நிா்வாக அலுவலா் ரெதீஸ் அளித்த புகாரின் பேரில் 4 போ் மீதும் சூலைக்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.