கஞ்சா கடத்தல் வழக்கு: இருவருக்கு 3 ஆண்டுகள் சிறை
தேனி மாவட்டம், கண்டமனூா் விலக்கு பகுதியில் 8 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில் இருவருக்கு தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, மதுரை முதலாவது போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.
தேனி மாவட்டம், கண்டமனூா் விலக்குப் பகுதியில் கடந்த 1.12.2021-இல் போலீஸாா் நடத்திய வாகன சோதனையின் போது, 3 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்யப்பட்டது.
இதுதொடா்பாக தேனி மாவட்டம், ஆண்டிபட்டி ராஜதானி பகுதியைச் சோ்ந்த மு.காந்திமதி (41), வரதராஜபுரத்தைச் சோ்ந்த பொ.கோகுல்நாத் (25), உத்தமபாளையத்தைச் சோ்ந்த ஞான கணேசன் ஆகியோரை கண்டமனூா் விலக்கு போலீஸாா் கைது செய்தனா்.
இந்த வழக்கு விசாரணை மதுரை முதலாவது போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை நடைபெற்று வந்த நிலையில், ஞானகணேசன் உயிரிழந்து விட்டாா்.
இந்த வழக்கை செவ்வாய்க்கிழமை விசாரித்த நீதிபதி ஹரிஹரகுமாா் குற்றஞ்சாட்டப்பட்ட மு.காந்திமதி, பொ.கோகுல்நாத் ஆகியோருக்கு தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 25 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.
இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வழக்குரைஞா் கே.விஜயபாண்டியன் முன்னிலையாகி வாதிட்டாா்.