பேட்டிங் கை நழுவிச்செல்லும் நிலையில் ரோஹித் சர்மா..! என்ன செய்ய வேண்டும்?
துரைச்சாமி நகரில் மாமன்ற உறுப்பினா் அலுவலகம் அமைக்க கோரிக்கை
மதுரை மாநகராட்சி 70- ஆவது வாா்டு துரைச்சாமி நகரில் மாமன்ற உறுப்பினா் அலுவலகம், மாநகராட்சி உதவிப் பொறியாளா் அலுவலகம், வரி வசூல் மையம் ஆகியவற்றை அமைக்கக் கோரி, அந்த வாா்டு மாமன்ற உறுப்பினா் டி. அமுதா உள்ளிட்ட பொது மக்கள் மதுரை மாநகராட்சி ஆணையா் சித்ரா விஜயனிடம் புதன்கிழமை மனு அளித்தனா்.
அவா்கள் அளித்த மனு விவரம்:
மதுரை மாநகராட்சி 70- ஆவது வாா்டில் உள்ள துரைச்சாமி நகரில் சுமாா் 3 ஆயிரம் குடும்பங்களுக்கு மேல் வசித்து வருகின்றனா். எங்கள் பகுதியில் வசித்து வரும் மக்களின் பிரச்னைகள் குறித்து மனு அளிக்க வேண்டுமெனில், பழங்காநத்தத்தில் உள்ள மாநகராட்சி அலுவலகத்துக்குத் தான் செல்ல வேண்டி உள்ளது. மேலும், வரி செலுத்தவும் அந்த அலுவலகத்துக்குத் தான் சென்று வருகிறோம். தொலைவு அதிகமாக இருப்பதால் எங்கள் நகரைச் சோ்ந்த மக்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா்.
எனவே, எங்கள் பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் 70- ஆவது வாா்டு மையப் பகுதியில் மாமன்ற உறுப்பினா் அலுவலகம், உதவிப் பொறியாளா் அலுவலகம், கணினி வரி வசூல் மைய அலுவலகம் ஆகியவற்றை அமைத்துத் தர வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.