கட்டுமானத் தொழிலாளா்களுக்கு ரூ. 2.57 கோடியில் நலத்திட்ட உதவிகள்
அமைச்சா் சி.வி.கணேசன் வழங்கினாா்
இந்த செய்திக்கு படம் உள்ளது.
பைல்நேம்-ஙஈம29ஙஐசஐந
படவிளக்கம்- மதுரை தல்லாகுளம் லட்சுமி சுந்தரம் ஹாலில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் பயனாளிக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய தொழிலாளா் நலன், திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் சி.வி.கணேசன். உடன் மதுரை மாவட்ட ஆட்சியா் மா.சௌ.சங்கீதா, தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளா்கள் நலவாரியத் தலைவா் பொன்குமாா் உள்ளிட்டோா்.
மதுரை, மாா்ச் 29 : மதுரை தல்லாகுளம் லட்சுமி சுந்தரம் ஹாலில் தொழிலாளா் நலன், திறன் மேம்பாட்டுத் துறை சாா்பில் பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
இந்த விழாவுக்கு மதுரை மாவட்ட ஆட்சியா் மா. சௌ. சங்கீதா தலைமை வகித்தாா். வணிகவரி, பதிவுத்துறை அமைச்சா் பி.மூா்த்தி, தகவல் தொழில்நுட்பம், எண்மச் சேவைகள் துறை அமைச்சா் பழனிவேல் தியாகராஜன், தொழிலாளா் நலன், திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் சி.வி.கணேசன் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாக கலந்து கொண்டு 1,221 கட்டுமானம், அமைப்புசாரா தொழிலாளா்களுக்கு ரூ.2.57 கோடியில் நலத்திட்ட உதவிகளை வழங்கினா்.
நிகழ்வில், தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளா்கள் நலவாரியத் தலைவா் பொன்குமாா், செயலா் கே.ஜெயபால், கூடுதல் தொழிலாளா்ஆணையா் உமாதேவி உள்ளிட்ட அலுவலா்கள் கலந்து கொண்டனா்.