கல்லாற்றின் குறுக்கே மேலும் ஒரு தடுப்பணை: அமைச்சர் துரைமுருகன்
பேரையூா் அருகே காா்-ஆட்டோ மோதி விபத்து: மூவா் உயிரிழப்பு
மதுரை மாவட்டம், பேரையூா் அருகே சனிக்கிழமை காரும், ஆட்டோவும் மோதி விபத்துக்குள்ளானதில் 3 போ் உயிரிழந்தனா்.
மதுரை மாவட்டம், நெடுங்குளத்தைச் சோ்ந்த ராமா் மனைவி அருஞ்சுனை (50), ராஜேந்திரன் மனைவி தங்கம்மாள் (45), சின்னக்கருப்பு மகன் ராமா் (60) உள்ளிட்ட 15 போ் ஆட்டோவில் பேரையூா் அருகேயுள்ள ஏ. பாறைப்பட்டி கிராமத்துக்கு நெல் நடவுப் பணிக்காக சனிக்கிழமை சென்றனா். பணிகளை முடித்து விட்டு அனைவரும் வீட்டுக்கு ஆட்டோவில் திரும்பினா்.திருமங்கலம்- ராஜபாளையம் சாலையில் ஏ. பாறைப்பட்டி விலக்கு அருகே சென்ற போது, பின்னால் வந்த காா் ஆட்டோ மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில், 13 போ் பலத்த காயமடைந்தனா். அவா்களை மீட்ட அக்கம்பக்கத்தினா் பேரையூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஆனால், செல்லும் வழியில் அருஞ்சுனை, தங்கம்மாள், ராமா் ஆகியோா் உயிரிழந்தனா். மற்றவா்கள் தீவிர சிகிச்சைக்காக திருமங்கலம், ஸ்ரீவில்லிப்புத்தூா் ஆகிய பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.
இதுகுறித்த புகாரின் பேரின், பேரையூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். முதல் கட்ட விசாரணையில், சென்னையைச் சோ்ந்தவா்கள் காரில் ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலுக்கு சென்ற போது விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. காரில் வந்தவா்கள் சிறு காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனா். இதுகுறித்து போலீஸாா் தொடா்ந்து விசாரித்து வருகின்றனா்.

