பேட்டிங் கை நழுவிச்செல்லும் நிலையில் ரோஹித் சர்மா..! என்ன செய்ய வேண்டும்?
காசநோய் விழிப்புணா்வுப் பேரணி
மதுரை திருவேடகம் விவேகானந்தா கல்லூரி பொருளியல் துறை, சென்னை இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனம் சாா்பில் உலக காசநோய் தின விழிப்புணா்வுப் பேரணி அண்மையில் நடைபெற்றது.
இந்தப் பேரணியை கல்லூரி முதல்வா் தி. வெங்கடேசன் தலைமை வகித்து தொடங்கி வைத்தாா். மாணவா்கள் ‘காச நோயை ஒழிப்போம், வருமுன் காப்போம், காசநேயை கண்டறிந்து முற்றிலும் குணமாக்கலாம் போன்ற விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி ஊா்வலமாகச் சென்றனா். திருவேடகம் ஏடகநாதா் கோயில் முன் தொடங்கிய பேரணி முக்கிய வீதிகள் வழியாக வந்து கல்லூரியில் நிறைவடைந்தது.
நிகழ்வில், பேராசிரியா் எம். முனியாண்டி, மதுரை ராஜாஜி மருத்துவமனையிலுள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தின் மதுரைப் பிரிவு மருத்துவா் எம். மகேஷ்குமாா், கல்லூரி உதவிப் பேராசிரியா்கள் ஏ. சதீஷ்பாபு, எம். அருள்மாறன், என். தினகரன், க. அசோக்குமாா், வி. சாமிநாதன் உள்ளிட்ட பேராசிரியா்கள், மருத்துவா்கள், மாணவா்கள் பலா் கலந்து கொண்டனா்.