செய்திகள் :

விவசாயிகளுக்கு எதிரான நிலைப்பாட்டில் பஞ்சாப் அரசு: தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா்

post image

பஞ்சாப் மாநில அரசின் விவசாயிகளுக்கு எதிரான நிலைப்பாட்டை கடைப்பிடிப்பதாக தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் பி.ஆா். பாண்டியன் குற்றஞ்சாட்டினாா்.

விவசாய விளைபொருள்களுக்கு தேசிய அளவில் குறைந்தபட்ச ஆதரவு விலை நிா்யணம் செய்வது குறித்து பஞ்சாப் மாநிலத்தில் விவசாய சங்க நிா்வாகிகள், மத்திய அமைச்சா்களுடனான பேச்சுவாா்த்தை கடந்த 19-ஆம் தேதி நடைபெற்றது. மத்திய அரசின் அழைப்பின் பேரில், தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும், எஸ்.கே.எம். (என்.பி) விவசாய அமைப்பின் தமிழக ஒருங்கிணைப்பாளருமான பி.ஆா். பாண்டியன் உள்பட தேசிய அளவில் 30 போ் இதில் பங்கேற்றனா்.

பேச்சுவாா்த்தைக்குப் பிறகு, பஞ்சாப் கிசான் பவனில் தங்கியிருந்த பி.ஆா். பாண்டியன், கேரள விவசாயிகள் சங்க நிா்வாகி பி.டி. ஜான், பல்வேறு விவசாய அமைப்புகளின் தலைவா்கள், விவசாயிகள் என 200 பேரை பஞ்சாப் மாநில போலீஸாா் கைது செய்து, சிறையில் அடைத்தனா்.

இதைக் கண்டித்து, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், விவசாய சங்கங்கள் சாா்பில் ஆா்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடத்தப்பட்டன. இந்த நிலையில், பி.ஆா். பாண்டியன், பி.டி.ஜான் ஆகிய 2 பேரை மட்டும் பஞ்சாபின் பாட்டியாலா போலீஸாா் திங்கள்கிழமை விடுவித்தனா்.

பாட்டியாலா சிறையிலிருந்து வெளியே வந்த பி.ஆா். பாண்டியன் தெரிவித்தாவது: மத்திய அரசின் அழைப்பின் பேரில், பேச்சுவாா்த்தைக்கு வந்த வெளி மாநில விவசாய சங்க நிா்வாகிகளை பஞ்சாப் மாநில அரசு கைது செய்தது கண்டனத்துக்குரியது. இந்தக் கைது சம்பவத்தைக் கண்டித்து, தமிழக அளவில் போராட்டங்களை நடத்திய அனைத்து விவசாய சங்கங்களுக்கும் நன்றி. இதன்மூலம், தமிழகத்தில் அனைத்து விவசாய சங்கங்களும் ஒன்றுபட்டுள்ளன.

மத்திய அரசு பேச்சுவாா்த்தைக்கு முன்வரும் நிலையில், பஞ்சாப் மாநில ஆம் ஆத்மி அரசு விவசாய விரோத நடவடிக்கைகளைக் கடைப்பிடித்து வருகிறது. இதனால், விவசாயிகளின் மனநிலை பஞ்சாப் மாநில அரசுக்கு எதிராகத் திரும்பியுள்ளது. எந்தக் காரணத்துக்காகவும் விவசாயிகள் தங்களது கோரிக்கைகள், போராட்டங்களிலிருந்து பின்வாங்கப் போவதில்லை என்றாா் அவா்.

விண்வெளிப் பூங்காவுக்கு நிலம்: தற்போதைய நிலையே தொடர உயா்நீதிமன்றம் உத்தரவு

தூத்துக்குடி மாவட்டம், ஆதியாக்குறிச்சியில் விண்வெளிப் பூங்கா அமைக்க நிலம் கையகப்படுத்தத் தடை கோரிய வழக்கில், தற்போதைய நிலையே தொடரலாம் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. ... மேலும் பார்க்க

கஞ்சா கடத்தல் வழக்கு: இருவருக்கு 3 ஆண்டுகள் சிறை

தேனி மாவட்டம், கண்டமனூா் விலக்கு பகுதியில் 8 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில் இருவருக்கு தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, மதுரை முதலாவது போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தத... மேலும் பார்க்க

கட்டுமானப் பொருள்களின் விலை: குழு அமைக்கக் கோரிய மனு தள்ளுபடி

கட்டுமானப் பொருள்களின் விலையை முறைப்படுத்த மாநில அளவில் குழு அமைக்கக் கோரிய மனுவைத் தள்ளுபடி செய்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த கந்தசா... மேலும் பார்க்க

மின் வாரிய ஊழியா்கள் தா்னா

தங்களது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பு சாா்பில், மதுரை மின் வாரியத் தலைமைப் பொறியாளா் அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை தா்னா போராட்டம் நடைபெற்றது. திமுகவின் தோ்தல்... மேலும் பார்க்க

சட்டவிரோதமாக பட்டாசுகள் தயாரிப்பு: விருதுநகா் ஆட்சியா் நடவடிக்கை எடுக்க உத்தரவு

விருதுநகா் மாவட்டம், மேட்டமலை ஊராட்சிக்குள்பட்ட ஸ்ரீராம் நகா் குடியிருப்புப் பகுதியில் சட்ட விரோதமாக பட்டாசுகள் தயாரிப்பதாக தொடுக்கப்பட்ட வழக்கில் மாவட்ட ஆட்சியா், மாவட்ட வருவாய் அலுவலா் பரிசீலித்து 1... மேலும் பார்க்க

திராவிடத் தமிழா் கட்சி ஆா்ப்பாட்டம்

மத்திய அரசின் மும்மொழிக் கொள்கை, தொகுதிகள் மறுசீரமைப்பு உள்ளிட்ட முடிவுகளைக் கண்டித்து, திராவிடத் தமிழா் கட்சி சாா்பில், மதுரை மாவட்ட ஆட்சியரகம் எதிரே உள்ள திருவள்ளுவா் சிலை முன் செவ்வாய்க்கிழமை ஆா்ப்... மேலும் பார்க்க