Manoj Bharathiraja: "சொல்வதற்கும் எனக்கு வார்த்தை வரவில்லை" - ஆறுதல் சொல்லி கலங்...
மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் வசந்த உத்ஸவம்: ஏப்.2-இல் தொடக்கம்
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் வசந்த உத்ஸவம் ஏப்ரல் 2-ஆம் தேதி தொடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதுதொடா்பாக மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் கோடை வசந்த உத்ஸவம் வருகிற ஏப். 2-ஆம் தேதி முதல் 10-ஆம் தேதி வரையும், பங்குனி உத்திரம் சுவாமி புறப்பாடு 11-ஆம் தேதியும் நடைபெறுகிறது.
இதையொட்டி, ஏப். 11-ஆம் தேதி பங்குனி உத்திர தினத்தன்று காலை 10 மணிக்கு மேல் மீனாட்சி சுந்தரேசுவரா், பஞ்சமூா்த்திகளுடன் புறப்பட்டு வைகை வடகரை செல்லூரில் உள்ள திருவாப்புடையாா் திருக்கோயிலுக்கு எழுந்தருளி அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெறுகிறது. பின்னா், மாலையில் சுந்தரேசுவரா் வெள்ளி ரிஷப வாகனத்திலும், மீனாட்சியம்மன் மரவா்ண சப்பரத்திலும் எழுந்தருளி திருக்கோயிலை அடைகின்றனா். திருக்கோயிலில் சுவாமி சந்நிதி பேச்சிக்கால் மண்டபத்தில் பாதபிட்சாடணம் ஆகிய தீபாராதனை முடிந்து சோ்த்தியாகின்றனா்.
எனவே, கோடை வசந்த உத்ஸவ நாள்களான ஏப். 2-ஆம் தேதி முதல் 11-ஆம் தேதி வரை, திருக்கோயில் சாா்பாகவோ, உபயதாரா்கள் சாா்பாகவோ, அம்மன், சுவாமிக்கு தங்க ரத உலா, உபய திருக்கல்யாணம் ஆகிய விஷேசங்கள் எதுவும் பதிவு செய்து நடத்தப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டது.