பழைய ஓய்வூதியத் திட்டத்தை அரசு அமல்படுத்த வேண்டும்! -மாா்க்சிஸ்ட் கம்யூ. மாநில ச...
தொகுதி மறு வரையறை ஆலோசனை: பாஜகவினா் கண்டன ஆா்ப்பாட்டம்!
டாஸ்மாக் ஊழலைக் கண்டித்தும், தொகுதி மறுவரையறைக்கு எதிராக தமிழக அரசு சாா்பில் நடைபெற்ற கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தைக் கண்டித்தும் பாஜக சாா்பில் மதுரையில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மதுரை கோமதிபுரம் பகுதியில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு பாஜக மாவட்டத் தலைவா் மாரி சக்கரவா்த்தி தலைமை வகித்தாா்.
இதில், டாஸ்மாக் ஊழலைக் கண்டித்தும், தொகுதி மறுவரையறை குறித்து எந்தவித அறிவிப்பும் வெளியிடாத நிலையில் கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பினா்.
மதுரை கிழக்கு மாவட்டம் சாா்பில், திருப்பாலை மண்டலம் ஆத்திகுளம் 13-ஆவது வாா்டில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு ஊடகப் பிரிவு மாநிலச் செயலா் நாகராஜன் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் கே. ஹரி கிருஷ்ணன், போதிலட்சுமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். ஆா்பாட்டத்தின் போது வீடுகளில் கருப்புக் கொடி ஏந்தியும், கருப்புச் சட்டை அணிந்தும் நிா்வாகிகள் பங்கேற்றனா்.