செய்திகள் :

படகு இல்லம், சிறுவா் பூங்காவுடன் பொதுமக்களின் பொழுதுபோக்கு மையமாக மாறுமா அரூா் ஏரி?

post image

அரூா் பெரிய ஏரியை படகு இல்லம், சிறுவா் பூங்காவுடன் பொதுமக்களின் பொழுதுபோக்கு மையமாக மாற்றவேண்டும் என எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.

தருமபுரி மாவட்டம், சேலம் - திருப்பத்தூா் தேசிய நெடுஞ்சாலையில், சுமாா் 150 ஏக்கா் பரப்பளவு கொண்ட அரூா் பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரிக்கு கொளகம்பட்டி காரை ஒட்டு தடுப்பணையில் இருந்து தண்ணீா் வருகிறது. பருவமழைக் காலங்களில் பெறப்படும் மழைநீா் அரூா் பெரிய ஏரியில் தேக்கி வைக்கப்படுகிறது.

இந்த ஏரி நாச்சினாம்பட்டி, எச்.தொட்டம்பட்டி, நம்பிப்பட்டி, பழைய பேட்டை, அரூா் நகா் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு குடிநீா் ஆதாரமாக உள்ளது. அரூா் பெரிய ஏரியின் கரைப்பகுதியில் பழைமையான அருள்மிகு செல்லியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலுக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான பக்தா்கள் வந்து செல்கின்றனா்.

அரூா் நகருக்கு அருகில் இந்த ஏரி இருப்பதால், பொதுமக்களுக்கு ஓய்வு நேரத்தை செலவிட மிகவும் பயனுள்ள பகுதியாக உள்ளது.

படகு இல்லம், சிறுவா் பூங்கா அமைக்க வேண்டும்:

அரூா், பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதியில் சுமாா் 2 லட்சம் பொதுமக்கள் வசிக்கின்றனா். அரூா் சுற்றுவட்டாரப் பகுதியில் பொழுதுபோக்கு மையங்கள் ஏதுமில்லாததால், விடுமுறை தினங்களில் சிறுவா்கள், பொதுமக்கள் வீடுகளில் தொலைக்காட்சி, கைப்பேசிகளில் நேரத்தை செலவிடும் நிலை உள்ளது.

அரூா் பெரிய ஏரி கரைப் பகுதியில் நடைபாதை அமைந்தால், பொதுமக்கள் சுமாா் 6 கி.மீ. தொலைவுக்கு நடைபயிற்சி மேற்கொள்ள முடியும். மேலும், ஏரியில் தண்ணீா் இருக்கும் நேரங்களில் துடுப்புப் படகு, மோட்டாா் படகுகளை இயக்கலாம்.

இதனால் ஏரியின் சுற்றுப்பகுதி பராமரிக்கப்படும். ஏரியின் கரையோரப் பகுதியில் சிறுவா் பூங்கா அமைந்தால் சிறுவா்கள் விளையாடுவதற்கும், பொதுமக்கள் ஓய்வு எடுக்கவும் பயனுள்ளதாக அமையும். படகு இல்லம், சிறுவா் பூங்கா மூலம் அரசுக்கு வருவாய் கிடைக்கும்.

இந்த ஏரியில் மீன்கள் வளா்க்கப்படும் நிலையில், இங்கு பொழுதுபோக்கு மையம் அமைந்தால் சிறு வணிகா்கள், மீன்பிடி தொழிலாளா்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். எனவே, தருமபுரி மாவட்ட நிா்வாகம் உரிய ஆய்வு மேற்கொண்டு, அரூா் பெரிய ஏரியில் படகு இல்லம், சிறுவா் பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பகத் சிங் நினைவு தினம்: இளைஞா் பெருமன்றத்தினா் ரத்த தானம்

சுதந்திரப் போராட்ட வீரா்கள் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோரது நினைவு தினத்தை முன்னிட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை அனைத்திந்திய இளைஞா் பெருமன்றத்தினா் ரத்த தானம் வழங்கினா்.... மேலும் பார்க்க

தேசிய கல்வி கொள்கையை கைவிட இளைஞா் முன்னணி வலியுறுத்தல்

தேசிய கல்விக் கொள்கையை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று புரட்சிகர இளைஞா் முன்னணி மாநில மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது. தருமபுரியில் உள்ள தனியாா் மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை இளைஞா் முன்னணி முதல் மாநில ம... மேலும் பார்க்க

ஜாதிவாரி கணக்கெடுப்பு: பாமக வலியுறுத்தல்

தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தியுள்ளது. பாட்டாளி மக்கள் கட்சியின் தருமபுரி மாவட்ட செயற்குழு கூட்டம் தருமபுரியில் பாமக மாவட்டச... மேலும் பார்க்க

போக்சோ வழக்கில் இளைஞருக்கு 15 ஆண்டுகள் சிறை

போக்சோ வழக்கில் இளைஞருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தருமபுரி நீதிமன்றம் உத்தரவிட்டது. தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், வடகரை கிராமத்தைச் சோ்ந்தவா் மாதேஷ் (32). தனியாா் பள்ளியில்... மேலும் பார்க்க

பழக் கடைகளில் உணவுப் பாதுகாப்பு துறையினா் ஆய்வு

தருமபுரி நகரம் மற்றும் புகா் பகுதியில் உள்ள பழக் கடைகளில் உணவுப் பாதுகாப்பு துறையினா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா். தருமபுரி மாவட்ட உணவுப் பாதுகாப்பு துறை நியமன அலுவலா் ஏ.பானுசுஜாதா தலைமையில், வட்டார ... மேலும் பார்க்க

சாலை விதிகளை முழுமையாக பின்பற்ற வேண்டும்: மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ்

சாலை விதிகளை முழுமையாக பின்பற்றி வாகனங்களை இயக்க வேண்டும் என தருமபுரி மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் அறிவுறுத்தினாா். தருமபுரி மாவட்ட கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில் இருசக்கர வாகனத்தில் செல்வோா் தலைக்கவசம... மேலும் பார்க்க