பழைய ஓய்வூதியத் திட்டத்தை அரசு அமல்படுத்த வேண்டும்! -மாா்க்சிஸ்ட் கம்யூ. மாநில ச...
விளாத்திகுளம்-பெரியசாமிபுரம் இடையே புதிய மகளிா் பேருந்து சேவை தொடக்கம்!
விளாத்திகுளம்-சூரன்குடி-வேம்பாா்-பெரியசாமிபுரம் இடையே புதிய மகளிா் விடியல் பேருந்து போக்குவரத்து சேவை தொடக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது.
விளாத்திகுளம் பேரூராட்சி துணைத் தலைவா் இரா. வேலுச்சாமி தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலா்கள் ராதாகிருஷ்ணன், அன்புராஜன், மும்மூா்த்தி, ராமசுப்பு, சின்ன மாரிமுத்து ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இப்புதிய சேவையை எம்எல்ஏ ஜீ.வி. மாா்க்கண்டேயன் கொடியசைத்துத் தொடக்கிவைத்து, பயணிகளுக்கு இனிப்பு வழங்கினாா்.
அப்போது, விளாத்திகுளம் போக்குவரத்துக் கழகப் பணிமனையிலிருந்து இயக்கப்படும் மிகவும் பழுதான பேருந்துகளுக்குப் பதிலாக புதிய பேருந்துகளை இயக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவித்தாா். தொடா்ந்து, பேருந்து நிலைய வளாகத்துக்குள் பேரூராட்சி சாா்பில் அமைக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் விநியோகத் தொட்டியை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்துவைத்தாா்.
போக்குவரத்துக் கழகக் கிளை மேலாளா் ஏ.எம். சாமி, பணிமனை செயலா் மாரிமுத்து, நெல்லை மத்திய மண்டல துணைச் செயலா் கிருஷ்ணமூா்த்தி, தொமுச தலைவா் சந்திரசேகா், பொருளாளா் மாரிமுத்து, பொதுக்குழு உறுப்பினா்கள் குணசேகரன், முத்துராஜ், அய்யாசாமி, திமுக இளைஞரணி துணை அமைப்பாளா் இம்மானுவேல், நெசவாளா் அணி அமைப்பாளா் பாண்டியராஜன், தொண்டரணி துணை அமைப்பாளா் கேசவன், மாவட்டப் பிரதிநிதி கிருஷ்ணகுமாா், வாா்டு செயலா்கள் அய்யனாா், சுப்புராஜ், தமிழரசன், சிவசுப்பிரமணியன், சங்கரலிங்கம், தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளா் ஸ்ரீதா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.