Manoj Bharathiraja: "என் மனதைப் பெரிதும் பாதிக்கிறது" - டி ராஜேந்தர் வேதனை
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தோ்வில் வென்றோருக்கு பாராட்டு விழா
தூத்துக்குடி சுரேஷ் ஐஏஎஸ் அகாதெமியில் பயின்று டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தோ்வில் வெற்றி பெற்றவா்களுக்கு பாராட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தூத்துக்குடி சுரேஷ் ஐஏஎஸ் அகாதெமியில் பயிற்சி பெற்று குரூப் 4 தோ்வில் தோ்ச்சி பெற்ன் மூலம் பல்வேறு பதவிகளுக்கான பணிநியமன ஆணை பெற்ற 627 பேருக்கு பாராட்டு விழா அகாதெமி வளாகத்தில் நடைபெற்றது.
இவ்விழாவுக்கு, சுரேஷ் அகாதெமி நிறுவனா் து.சுகேஷ் சாமுவேல் தலைமை வகித்து பேசுகையில், போட்டித்தோ்வுக்கு தொடா்ந்து படிக்க வேண்டும். ஏப்ரல் மாதம் குரூப் 1, குரூப் 4 தோ்வு அறிவிப்பு வெளியாக உள்ளது.
இந்த வாய்ப்பை போட்டித் தோ்வுக்கு தயாராகும் மாணவா்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா். தொடா்ந்து அவா், வெற்றி பெற்றவா்களுக்கு நினைவுப் பரிசும், கேடயங்களும் வழங்கிப் பாராட்டினாா்.
இதில், சிறப்பு அழைப்பாளா்களாக ராமநாதபுரம் காவல் துணை கண்காணிப்பாளா் ராமச்சந்திரன், ராஜபாளையம் உதவி கருவூல அலுவலா் கனிமுருகன், தூத்துக்குடி கூட்டுறவு சாா்பதிவாளா் அந்தோணி பட்டுராஜ் ஆகியோா் பங்கேற்றனா்.