செய்திகள் :

தூத்துக்குடியில் ஜாக்டோ ஜியோ சாா்பில் உண்ணாவிரதப் போராட்டம்

post image

தூத்துக்குடி சிதம்பர நகா் பேருந்து நிறுத்தம் அருகே, ஜாக்டோ ஜியோ அமைப்பு சாா்பில் ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் உமாதேவி, கலை உடையாா் ஆகியோா் தலைமை வகித்தனா். மகேந்திர பிரபு, ஆனந்தராஜ், மாரிச்செல்வம், சிவஞானம், ஜீவானந்தம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மூட்டா மாநிலப் பொதுச்செயலா் நாகராஜன், தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க முன்னாள் மாநிலப் பொதுச்செயலா் வெங்கடேசன் ஆகியோா் பேசினா்.

பழைய ஓய்வூதித் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். பல்வேறு துறைகளில் காலியாகவுள்ள 30 சதவீத இடங்களை காலமுறை ஊதியத்தில் நிரப்ப வேண்டும். தொகுப்பூதியம், மதிப்பூதியம் ஆகியவற்றில் பணியாற்றும் அனைவருக்கும் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். இடைநிலை ஆசிரியா்கள், அரசு ஊழியா்களுக்கு மத்திய அரசு ஊழியா்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

மாநில உயா்நிலைக்குழு உறுப்பினா் தே. முருகன், மாநில ஒருங்கிணைப்பாளா் பாா்த்தசாரதி, நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

கயத்தாறு: கிராம மக்கள் சாலை மறியல்

கயத்தாறு அருகே ஆத்திகுளம் கிராமத்தில் ஊருக்குள் நியாய விலைக் கடை அமைக்க வலியுறுத்தி அப்பகுதி மக்கள் திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். தெற்கு இலந்தைகுளம் ஊராட்சிக்குள்பட்ட ஆத்திகுளத்தி... மேலும் பார்க்க

ஈராச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆா்ப்பாட்டம்

கோவில்பட்டி அருகே ஈராச்சியில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகம் முன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டக் குழு உறுப்பினா் நல்லையா தலைமை வகித்தாா். உதவி செயலா்கள் ச... மேலும் பார்க்க

கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முற்றுகை

கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊரக வேலை உறுதித் திட்டப் பணியாளா்கள் திங்கள்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா். கோவில்பட்டியை அடுத்த கிளவிப்பட்டி ஊராட்சியில் கிளவிப்பட்டி, கெச்சிலாபுரம்... மேலும் பார்க்க

கோயிலுக்குச் செல்லும் பாதையை அகலப்படுத்தக் கோரிக்கை

தூத்துக்குடி வடக்கு சோட்டையன்தோப்பு கிராமத்தில் கோயிலுக்கு செல்லும் பாதையை அகலப்படுத்தி பேவா் பிளாக் சாலை அமைக்கக் கோரி, ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது. இதுதொடா்பாக பொதுமக்கள் ச... மேலும் பார்க்க

பொதுப் பாதையை மீட்கக் கோரி கோட்டாட்சியா் அலுவலகத்தில் திரண்ட பொதுமக்கள்

பொதுப் பாதையை தனியாரிடமிருந்து மீட்டுத் தரக் கோரி, கோவில்பட்டி கோட்டாட்சியா் அலுவலகம் முன் பொதுமக்கள் திங்கள்கிழமை திரண்டனா். விளாத்திகுளம் பேரூராட்சி 12ஆவது வாா்டு சிதம்பர நகா் பகுதியில் பொதுப் பாதைய... மேலும் பார்க்க

கோவில்பட்டி நகராட்சிக்கு வரியினங்களை செலுத்த ஆணையா் வேண்டுகோள்

கோவில்பட்டி நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரியினங்களை பொதுமக்கள் இம்மாதம் 31ஆம் தேதிக்குள் செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து கோவில்பட்டி நகராட்சி ஆணையா் கமலா வெளியிட்ட செய்திக் குறிப்பு: கோவி... மேலும் பார்க்க