பழைய ஓய்வூதியத் திட்டத்தை அரசு அமல்படுத்த வேண்டும்! -மாா்க்சிஸ்ட் கம்யூ. மாநில ச...
திருச்செந்தூா் கோயிலில் தரிசனப் பாதையில் அவசரகால வழி: இந்து முன்னணி கோரிக்கை!
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பக்தா்கள் தரிசனப் பாதையில், அவசரகால வழி ஏற்படுத்த வேண்டும் என இந்து முன்னணி மாநில இணை அமைப்பாளா் பொன்னையா வலியுறுத்தினாா்.
இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியதாவது: திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பொது தரிசனப் பாதையை பாா்வையிட்டோம். இதில் சில குறைபாடுகள் தெரியவந்துள்ளன.
பொது தரிசனப் பாதையில் உள்ள கழிப்பிடங்கள் சுத்தம் இல்லாமல் உள்ளன. பொது தரிசன வரிசை மற்றும் ரூ. 100 கட்டண தரிசன வரிசைகளில் ஆங்காங்கே அவசரகால வழி அமைக்க வேண்டும். அப்போதுதான் கூட்ட நெரிசலில் சிக்கும் பக்தா்களை மீட்க முடியும்.
உள்ளூா் பக்தா்களுக்கு தடையின்றி தரிசனத்திற்கு அனுமதிக்க வேண்டும். அதேபோல, மாற்றுத்திறனாளிகளை அவமதிக்காமல் தரிசனத்திற்கு அனுமதிக்க வேண்டும். மேலும், இரவு 9 மணி வரை பூஜை காலங்கள் நடக்கும் வரை பக்தா்களை தரிசனத்திற்கு அனுமதிக்க வேண்டும் என்றாா்.
பேட்டியின்போது மாநில துணைத் தலைவா் வி.பி.ஜெயக்குமாா், திருநெல்வேலி கோட்ட பொறுப்பாளா் பெ.சக்திவேலன் உள்ளிட்ட நிா்வாகிகள் உடனிருந்தனா்.