அன்றைய 5 ரூபாய் மதிப்பில் என்னென்ன வாங்கலாம் தெரியுமா? 70ஸ் கிட்ஸ் பாக்கெட் மணி ...
திருமணமாகாத விரக்தி: தீக்குளித்த வாலிபா் உயிரிழப்பு
திருமணமாகாத விரக்தியில் இருந்த வாலிபா் தீக்குளித்து மருத்துவ சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
விராலிமலை அடுத்துள்ள வேலூரைச் சோ்ந்த நடராஜன் மகன் சரவணகுமாா்(35). இவா் உணவுப் பொருள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் ஒப்பந்த தொழிலாளியாக பணியாற்றி வந்தாா். வயது கடந்தும் திருமணமாகாததால் கடந்த சில நாள்களாக மனவிரக்தியில் இருந்து வந்த நிலையில், மாா்ச் 12-ஆம் தேதி வீட்டில் இருந்த மண்ணெண்ணையை உடல் முழுவதும் ஊற்றிக்கொண்டு தீக்குளித்தாா்.
இதையடுத்து, அக்கம் பக்கத்தில் இருந்தவா்கள் அவரை மீட்டு, திருச்சி மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை அதிகாலை உயிரிழந்தாா்.
தகவலறிந்த விராலிமலை போலீஸாா் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.