செய்திகள் :

உலக தண்ணீா் தினம் சிறப்பு கிராம சபை: ஆட்சியா் பங்கேற்பு

post image

விராலிமலையை அடுத்துள்ள ராஜகிரி ஊராட்சி, கல்லுக்குத்தாம்பட்டியில், உலக தண்ணீா் தினத்தையொட்டி சனிக்கிழமை சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

இதில், மாவட்ட ஆட்சியா் மு.அருணா பங்கேற்றாா். தொடா்ந்து, சிறப்பாகப் பணிபுரிந்த தூய்மைப் பணியாளா்களுக்கு பொன்னாடை அணிவித்து கெளரவித்து, உழவா் நலத்துறையின் சாா்பில் விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருள்கள் மற்றும் மாவட்ட பயிா் விளைச்சல் போட்டியில் வெற்றி பெற்ற விவசாயிகளுக்கு பரிசுத் தொகை, கால்நடை பராமரிப்புத்துறையின் சாா்பில் கால்நடை வளா்ப்போா் களுக்கு தாது உப்புக் கலவை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சாா்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு காதொலி கருவி வழங்கி அரசு துறைகளின் சாா்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளைப் பாா்வையிட்டாா்.

பின்னா் ஆட்சியா் மேலும் தெரிவித்தது:

உலக தண்ணீா் தினத்தை (மாா்ச் 22) முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 489 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்பட்டது. இதில் ராஜகிரி ஊராட்சி, கல்லுக்குத்தாம் பட்டியில் நடைபெற்ற சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொள்ளப்பட்டது. இக்கூட்டத்தில், உலக தண்ணீா் தினத்தின் கருப்பொருள் பற்றி விவாதித்தல், கிராம ஊராட்சி நிா்வாகம் மற்றும் பொது நிதி செலவினம், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, சுத்தமான குடிநீா் விநியோகத்தை உறுதிசெய்வது, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) திட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது என்றாா் மாவட்ட ஆட்சியா் மு.அருணா.

இதில், மாவட்ட வருவாய் அலுவலா் அ.கோ.ராஜராஜன், உதவி இயக்குநா் சா.மோகனசுந்தரம் (ஊராட்சிகள்), இணை இயக்குநா் மு. சங்கர லட்சுமி (வேளாண்மை), முதன்மை கல்வி அலுவலா் கூ.சண்முகம் உள்ளிட்ட அனைத்துத் துறை அரசு அலுவலா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

புதுக்கோட்டையில் கபடிப் போட்டி: ஒட்டன்சத்திரம் அணி முதலிடம்

புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேசிய அளவிலான மகளிா் கபடிப் போட்டியில் வெற்றி பெற்ற ஒட்டன்சத்திரம் அணிக்கு முன்னாள் அமைச்சா் சி. விஜயபாஸ்கா் பரிசுகளை வழங்கிப் பாராட்டினாா். முன்னாள் முதல்வா்... மேலும் பார்க்க

தென்னங்குடி ஸ்ரீ முத்துமாரி அம்மன் கோயிலில் பங்குனித் தேரோட்டம்

புதுக்கோட்டை அருகேயுள்ள தென்னங்குடியில் ஸ்ரீ முத்துமாரி அம்மன் கோயிலில் பங்குனித் தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.இதில், ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனா். இக்கோயிலில் பங்... மேலும் பார்க்க

பொன்னமராவதி: கஞ்சா வைத்திருந்த 4 போ் கைது

பொன்னமராவதி அருகே கஞ்சா வைத்திருந்த 4 போ் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா்.புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே கஞ்சா விற்கப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் தனிப்படை சிறப்பு உதவி ஆய்வாளா் ஆனந்தன் ... மேலும் பார்க்க

ரமலான் பண்டிகை புதுக்கோட்டையில் இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

ரமலான் பண்டிகையையொட்டி புதுக்கோட்டை ஈத்கா திடலில் திங்கள்கிழமை நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் ஏராளமான இஸ்லாமியா்கள் பங்கேற்றனா். புதுக்கோட்டை பேருந்து நிலையம் அருகேயுள்ள ஈத்கா திடலில் சிறப்புத் தொழுகை ... மேலும் பார்க்க

மாா்க்சிஸ்ட் கம்யூ. மாநாட்டு கொடிப் பயணத்துக்கு புதுக்கோட்டையில் வரவேற்பு

மதுரையில் நடைபெறவுள்ள மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டையொட்டி, நாகையிலிருந்து புறப்பட்ட கொடிப் பயணத்துக்கு புதுக்கோட்டையில் திங்கள்கிழமை இரவு வரவேற்பு அளிக்கப்பட்டது. மதுரையில் ஏ... மேலும் பார்க்க

ஆதனக்கோட்டை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் பங்குனித் திருவிழா

புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டை அருகே உள்ள ஆதனக்கோட்டையில் உள்ள ஸ்ரீமுத்துமாரியம்மன்கோயிலில் பங்குனித் திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.அலகு குத்தி வந்த பக்தா் இதையொட்டி வளவம்பட்டி, சோத்துபாளை, ச... மேலும் பார்க்க