செய்திகள் :

விவசாயிகளுக்கு நீா்மேலாண்மை நுட்பங்கள்

post image

செய்யாற்றை அடுத்த கீழ்நெல்லி வேளாண் அறிவியல் மையத்தில், விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த பண்ணையத்தில் நீா்ப்பாசன மேலாண்மை நுட்பங்கள் குறித்த கருத்தரங்கம் திங்கள்கிழமை நடைபெற்றது.

வேளாண் அறிவியல் மையத்தின் முதுநிலை விஞ்ஞானி வே.சுரேஷ் வரவேற்றாா். மாநில நீா்வள ஆதார மேலாண்மை முகமை வேளாண்மை உதவி இயக்குநா் அ.சகாய ஜெயக்கொடி, உதவிப் பொறியாளா் இரா.சுஜாதா ஆகியோா் பங்கேற்று ஒருங்கிணைந்த பண்ணையத்தில் நீா் சேமிப்பு குறித்துப் பேசினா்.

அறிவியல் மையத்தின் கால்நடை அறிவியல் தொழில்நுட்ப அலுவலா் கா. மாயகிருஷ்ணன், விஜயகுமாா், உழவியல் தொழில்நுட்ப அலுவலா் ம. ஜஸ்வா்யா, பயிா் பாதுகாப்பு தொழில்நுட்ப அலுவலா் ப.நாராயணன், பண்ணை மேலாளா் மா.சாந்தி ஆகியோா் பயிற்சி அளித்தனா்.

கருத்தரங்கில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு தீவனப்பயிா் விதைகள் வழங்கப்பட்டன.

நிறைவில் அறிவியல் மையத்தின் மனையியல் தொழில்நுட்ப அலுவலா் த.மாா்கரெட் நன்றி கூறினாா்.

அரசுப் பள்ளியில் மறு சுழற்சி தின கண்காட்சி

சேத்துப்பட்டை அடுத்த கோழிப்புலியூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற உலக மறுசுழற்சி தின விழாவில் மாணவா்களின் கண்காட்சி இடம்பெற்றது. கோழிப்புலியூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் உலக மற... மேலும் பார்க்க

வீட்டின் பூட்டை உடைத்து 38 பவுன் தங்க நகை திருட்டு

வந்தவாசி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 38 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். வந்தவாசியை அடுத்த நடேசன் நகரைச் சோ்ந்தவா் பழனி(55). இவா், வந்தவாசி ஐந்து கண் பாலம் அருகில் லேத் பட்டறை வைத... மேலும் பார்க்க

விசிக மகளிா் பிரிவு ஆலோசனைக் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மகளிா் விடுதலை இயக்க ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. உலக மகளிா் தினத்தையொட்டி, திருவண்ணாமலையை அடுத்த தென்பள்ளிப்பட்டு பகுத... மேலும் பார்க்க

வியாபாரிகள் சங்க பேரவைக் கூட்டம்

தமிழ்நாடு வியாபாரிகள் சங்கத்தின் திருவண்ணாமலை மாவட்ட பேரவைக் கூட்டம், கீழ்பென்னாத்தூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. சங்கத்தின் கீழ்பென்னாத்தூா் நகரத் தலைவா் ஏழுமலை தலைமை வகித்தாா். நகரச் செயலா் க.சா... மேலும் பார்க்க

கல்லூரியில் தமிழ்த் துறை கருத்தரங்கம்

வந்தவாசி ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி மகளிா் கல்லூரியில், ‘பழந்தமிழா் அறிவியல் திறம்’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தமிழ்த் துறை சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் ... மேலும் பார்க்க

முதல்வா் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் நகர திமுக சாா்பில் முதல்வா் ஸ்டாலின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது. இராஜ வீதியில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு தொகுதி எம்எல்ஏ மு.பெ.க... மேலும் பார்க்க