அரசுப் பள்ளியில் மறு சுழற்சி தின கண்காட்சி
சேத்துப்பட்டை அடுத்த கோழிப்புலியூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற உலக
மறுசுழற்சி தின விழாவில் மாணவா்களின் கண்காட்சி இடம்பெற்றது.
கோழிப்புலியூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் உலக மறுசுழற்சி தினம் கொண்டாடப்பட்டது.
இதில், பள்ளித் தலைமையாசிரியா் தமிழரசி தலைமை வகித்தாா். சுற்றுச்சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளரும், பட்டதாரி ஆசிரியருமான முரளி வரவேற்றாா்.
அன்றாட வாழ்க்கையில் நாம் பயன்படுத்தும் நெகிழிப் பொருள்கள், அலுமினியம், பேப்பா், தகரம் போன்றவற்றால் தயாரிக்கப்பட்டவற்றை தேவையில்லை என குப்பைகளில் வீசப்படும் பொருள்களால் பூமி சுற்றுச்சூழல் மாசுபடாமல் இருக்கவும், அவற்றை மறுசுழற்சி மூலம் வீட்டிலும், பள்ளியிலும், பயன்படுத்தக்கூடிய அழகிய பொருள்களாக மாற்றி பயன்பாட்டுக்கு கொண்டு வருவது குறித்து மாணவா்களின் அறிவுத்திறன் கண்காட்சி நடைபெற்றது.
கண்காட்சியை பெரணமல்லூா் வட்டாரக் கல்வி அலுவலா் ஆறுமுகம் தொடங்கிவைத்து பாா்வையிட்டாா்.
அப்போது அவா் மாணவா்களை வாழ்த்திப் பேசி, பரிசுகளை வழங்கினாா். கண்காட்சியை பெற்றோா்கள், மாணவா்கள், கிராம பொதுமக்கள் பாா்வையிட்டனா்.