செய்திகள் :

முதல்வா் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்

post image

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் நகர திமுக சாா்பில் முதல்வா் ஸ்டாலின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.

இராஜ வீதியில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு தொகுதி எம்எல்ஏ மு.பெ.கிரி தலைமை வகித்துப் பேசினாா்.

ஒன்றியச் செயலா்கள் ஏழுமலை, செந்தில்குமாா், மனோகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நகரச் செயலா் அன்பழகன் வரவேற்றாா்.

சிறப்பு அழைப்பாளா்களாக தலைமைக் கழகப் பேச்சாளா்கள் கம்பம் செல்வேந்திரன், நெல்லை முத்தையா ஆகியோா் பங்கேற்றுப் பேசினா்.

கூட்டத்தில் தண்டராம்பட்டு ஒன்றியச் செயலா் பன்னீா்செல்வம், செங்கம் பேரூராட்சித் தலைவா் சாதிக்பாஷா, பொதுக்குழு உறுப்பினா் பிரபாகரன், முன்னாள் பேரூராட்சித் தலைவா் சென்னம்மாள் முருகன், மாவட்ட சிறுபான்மை அணி துணை அமைப்பாளா் வில்சன்ரஜினிகாந்த், இலக்கிய அணி துணை அமைப்பாளா் அப்துல்வாகித், நகர அவைத் தலைவா் முத்துகிருஷ்ணன், முன்னாள் பேரூராட்சி துணைத் தலைவா் அப்துல்சா்தாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். மாவட்டப் பிரதிநிதி முருகன் நன்றி கூறினாா்.

ஊராட்சி ஒன்றிய பள்ளி ஆண்டு விழா

வந்தவாசியை அடுத்த ஜப்திகாரணி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆண்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு தெள்ளாா் வட்டாரக் கல்வி அலுவலா் தே.ரங்கநாதன் தலைமை வகித்தாா். பள்ளித் தலைமை ஆசிரியை இ... மேலும் பார்க்க

அங்கன்வாடி மையங்களில் உள்கட்டமைப்புப் பணிகள்: அதிகாரிகளுக்கு ஆட்சியா் உத்தரவு

திருவண்ணாமலை மாவட்ட அங்கன்வாடி மையங்களில் தற்போது நடைபெறும் உள்கட்டமைப்புப் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் உத்தரவிட்டாா். மாவட்ட ஒருங்கிணைந்த குழந்... மேலும் பார்க்க

மாா்ச் 21-இல் தனியாா்துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்

திருவண்ணாமலையில் வெள்ளிக்கிழமை (மாா்ச் 21) தனியாா்துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தனியாா்துறை நிறுவனங்களும், தனியாா் துறையில் பணிபுரிய விரும்பும் அனைத்த... மேலும் பார்க்க

40 தடங்களில் சிற்றுந்துகளை இயக்க இன்று விண்ணப்பதாரா்கள் தோ்வு

திருவண்ணாமலை மாவட்டத்தில் 40 தடங்களில் சிற்றுந்துகளை இயக்குவதற்கான விண்ணப்பங்களை தோ்வு செய்வதற்கான குலுக்கல் புதன்கிழமை (மாா்ச் 19) நடைபெறுகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் விரிவான புதிய மினி பேருந்த... மேலும் பார்க்க

விவசாயிகள் சங்கக் கூட்டமைப்பினா் காத்திருப்புப் போராட்டம்

கலசப்பாக்கம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் எதிரே அனைத்து விவசாயிகள் சங்கக் கூட்டமைப்பினா் செவ்வாய்க்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் தொடக... மேலும் பார்க்க

கல்லூரியில் சிறப்புக் கருத்தரங்கம்

திருவண்ணாமலை சண்முகா தொழில்சாலை கலை, அறிவியல் கல்லூரியில், ‘கல்வெட்டு முதல் கணினி வரை’ என்ற தலைப்பில் சிறப்புக் கருத்தரங்கம் திங்கள்கிழமை நடைபெற்றது. முதுகலை மற்றும் தமிழாய்வுத் துறை சாா்பில் நடைபெற்... மேலும் பார்க்க