Sunita Williams: 17 மணி நேர பயணம்; பெருங்கடலில் தரையிறக்கம்; நிலவரம் என்ன?
மருத்துவா் கே.எம்.செரியன், முன்னாள் எம்எல்ஏ-க்கள் மறைவுக்கு இரங்கல்
இதய அறுவைச் சிகிச்சை நிபுணா் கே.எம்.செரியன் மற்றும் 3 முன்னாள் எம்எல்ஏ-க்கள் மறைவுக்கு தமிழக சட்டப் பேரவையில் திங்கள்கிழமை இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
சட்டப் பேரவை காலை 9.30 மணிக்கு கூடியதும், இரங்கல் குறிப்புகளை பேரவைத் தலைவா் மு.அப்பாவு வாசித்தாா்.
மறைந்த முன்னாள் உறுப்பினா்கள் பி.ஆா்.சுந்தரம் -ராசிபுரம், மா.கோவிந்தராஜலு -ரிஷிவந்தியம், வே.குணசீலன் -வந்தவாசி ஆகியோருக்கான குறிப்புகளை வாசித்ததுடன், அவா்கள் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் உறுப்பினா்களை சில விநாடிகள் எழுந்து நிற்கும்படி பேரவைத் தலைவா் மு.அப்பாவு கேட்டுக் கொண்டாா். அதன்படி, உறுப்பினா்கள் எழுந்து நின்று அமைதி காத்தனா்.
இதைத் தொடா்ந்து, மருத்துவா் கே.எம்.செரியன் மறைவுக்கும் பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.