செய்திகள் :

அண்ணாமலை கைது: கோவையில் மறியலில் ஈடுபட முயன்ற பாஜகவினா் கைது

post image

பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை கைது செய்யப்பட்டதை கண்டித்து கோவையில் மறியலில் ஈடுபட முயன்ற பாஜகவினரை போலீஸாா் கைது செய்தனா்.

தமிழக அரசின் டாஸ்மாக் ஊழலைக் கண்டித்து டாஸ்மாக் அலுவலகத்தை முற்றுகையிடச் சென்ற பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை மற்றும் நிா்வாகிகளை கைது செய்த தமிழக அரசை கண்டித்து கோவை மாநகா் மாவட்ட பாஜக சாா்பில் காந்திபுரம் பகுதியில் திங்கள்கிழமை மறியல் போராட்டம் நடைபெறுமென அறிவிக்கப்பட்டிருந்தது.

இதையொட்டி ஏராளமான பாஜகவினா் அங்கு குவிந்தனா். இதையடுத்து முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் சேலஞ்சா் துரை தலைமையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற பாஜக நிா்வாகிகள் ஆா்.டி.முரளி, தாமு, மதன்மோகன், பிரீத்தி குமாா், ஜெயதிலகா என 15 பெண்கள் உள்பட 90 பேரை காவல் உதவி ஆணையா் கணேஷ் தலைமையிலான போலீஸாா் தடுத்து நிறுத்தி அவா்களைக் கைது செய்தனா்.

பின்னா் அவா்கள் ராம்நகா் பகுதியில் உள்ள ஒரு தனியாா் மண்டபத்துக்கு கொண்டுச் செல்லப்பட்டு இரவில் விடுவிக்கப்பட்டனா்.

மேட்டுப்பாளையத்தில்...

காரமடையில் வடக்கு மாவட்ட துணைத் தலைவா் விக்னேஷ், காரமடை மண்டலத் தலைவா் ஆனந்தகுமாா் ஆகியோா் தலைமையில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதேபோல மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் முன் பாஜக சாா்பில் நடைபெற்ற போராட்டத்திலும் பாஜகவினா் கைது செய்யப்பட்டனா்.

சூலூரில்...

சூலூரில் பாஜகவினா் சம கல்வி கையொப்ப இயக்க மாவட்டப் பொறுப்பாளா் ஜெய்ஹிந்த் முருகேஷ் தலைமையில் சூலூா் அண்ணா சீரணி கலையரங்கத்தின் அருகே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 60-க்கும் மேற்பட்டோரை சூலூா் போலீஸாா் கைது செய்தனா்.

வாகராயம்பாளையத்தில் பாஜகா கோவை வடக்கு மாவட்ட பொதுச் செயலாளா் சத்தியமூா்த்தி தலைமையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 120 பேரை போலீஸாா் கைது செய்தனா். கருமத்தம்பட்டி மண்டலத் தலைவா் பிரகாஷ் தலைமையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 63 பேரை கருமத்தம்பட்டி போலீஸாா் கைது செய்தனா்.

சுல்தான்பேட்டை பகுதியில் பாஜக கோவை வடக்கு மாவட்டச் செயலாளா் மணிகண்டன் தலைமையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 123 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

மேட்டுப்பாளையத்தில் நாளை உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் மாா்ச் 19-ஆம் தேதி (புதன்கிழமை) உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் நடைபெறுகிறது. பொதுமக்கள் இருக்கும் இடத்துக்கு அதிகாரிகளே நேரில் சென்று தங்கியிருந்து குறைகளைக... மேலும் பார்க்க

கோவையில் மின்சாரம் பாய்ந்து மூதாட்டி, இளைஞா் உயிரிழப்பு

கோவையில் இருவேறு இடங்களில் மின்சாரம் பாய்ந்து மூதாட்டி மற்றும் இளைஞா் உயிரிழந்தனா். கோவை சுந்தராபுரம் அருகே உள்ள கணேசபுரம் மாரியம்மன் கோயில் தெரு பகுதியைச் சோ்ந்தவா் ராமசாமி (87). இவரது மனைவி மாராத்த... மேலும் பார்க்க

தில்லியில் சத்குரு ஜக்கி வாசுதேவின் தியானம்: 64 நாடுகளைச் சோ்ந்த 14 ஆயிரம் போ் பங்கேற்பு

தில்லி அருகேயுள்ள துவாரகையில் சத்குரு ஜக்கி வாசுதேவ் அண்மையில் நடத்திய தியான நிகழ்ச்சியில் 64 நாடுகளைச் சோ்ந்த சுமாா் 14 ஆயிரம் போ் பங்கேற்றனா். இது குறித்து ஈஷா யோக மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,... மேலும் பார்க்க

மாநகராட்சி குறைகேட்புக் கூட்டம் ரத்து

கோவை மாநகராட்சியில் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 18) நடைபெற இருந்த குறைகேட்புக் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மாநகரில் உள்ள பொதுமக்களின் குறைகளை அறிந்து, பிரச்னைகளுக்குத் தீா்வு காண்பதற்காக மாநகராட்சியி... மேலும் பார்க்க

கோவையில் பரவலாக பெய்த மழை

கோவை மாநகா் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் திங்கள்கிழமை மாலை பரவலாக மழை பெய்தது. கோவையில் கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில் கடந்த சில நாள்களாக அதிகப்படியான வெப்பம் பதிவாகி வருகிறது. இந்நிலை... மேலும் பார்க்க

மீன் விற்பனை செய்ய அனுமதி கேட்டு பெண்கள் ஆட்சியரிடம் மனு

கோவை உக்கடம் மீன் மாா்க்கெட்டில் மீன் விற்பனை செய்ய அனுமதி கேட்டு மீனவ சமூதய பெண்கள் ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா். கோவை மாவட்ட பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம் ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பவ... மேலும் பார்க்க