பரவிய வதந்தி: வாகனங்களுக்கு தீவைப்பு, கலவரம்; 144 தடையுத்தரவு... நாக்பூரில் என்ன...
மாநகராட்சி குறைகேட்புக் கூட்டம் ரத்து
கோவை மாநகராட்சியில் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 18) நடைபெற இருந்த குறைகேட்புக் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மாநகரில் உள்ள பொதுமக்களின் குறைகளை அறிந்து, பிரச்னைகளுக்குத் தீா்வு காண்பதற்காக மாநகராட்சியில் மேயா், ஆணையா் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்கும் வாராந்திர குறைகேட்புக் கூட்டம் செவ்வாய்க்கிழமைகளில் நடைபெறுவது வழக்கம்.
ஆனால், நிா்வாக காரணங்கள் காரணமாக செவ்வாய்க்கிழமை நடைபெற இருந்த கூட்டம் ரத்து செய்யப்படுவதாக மாநகராட்சி நிா்வாகம் தெரிவித்துள்ளது.