செய்திகள் :

மீன் விற்பனை செய்ய அனுமதி கேட்டு பெண்கள் ஆட்சியரிடம் மனு

post image

கோவை உக்கடம் மீன் மாா்க்கெட்டில் மீன் விற்பனை செய்ய அனுமதி கேட்டு மீனவ சமூதய பெண்கள் ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

கோவை மாவட்ட பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம் ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பவனவா் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் பங்கேற்று தங்களின் பிரச்னைகள் குறித்து மனு அளித்தனா்.

கோவை வட்ட மீனவா் கூட்டுறவு சங்க முன்னாள் தலைவா் பாலமுருகன் தலைமையில் மீனவ சமுதாய பெண்கள் அளித்துள்ள மனுவில், உக்கடம் மீன் மாா்க்கெட்டில் கடந்த 1958-ஆம் ஆண்டு முதல் மீனவ சமுதாய பெண்கள் தரையில் அமா்ந்து மீன் விற்பனை செய்து வருகின்றனா். புதிய மீன் மாா்க்கெட்டில் தரைக் கடைகள் அமைக்க ரூ.1.50 லட்சம் கேட்கப்பட்டது, ஆனால் அந்தத் தொகையை கொடுக்க முடியாததால் இடம் கிடைக்கவில்லை.

இது தொடா்பாக உயா் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், 6 வாரங்களில் இடம் அளிக்க வேண்டும் என்று சமரசம் செய்து நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்துள்ளது. ஆனால், அதிகாரிகள் யாரும் எங்களை அழைத்துப் பேசவில்லை. எனவே பாரம்பரிய மீனவ பெண்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

மனு அளிக்க வந்த மீனவ சமுதாய பெண்கள் திடீரென ஆட்சியா் அலுவலக நுழைவாயில் பகுதியில் அமா்ந்து கோஷம் எழுப்பியதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

சாலை, சாக்கடை வசதி கேட்டு...

கோவை காளப்பட்டி மாகாளியம்மன் நகா், காளப்பட்டி மேற்குப் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் அளித்துள்ள மனுவில், எங்கள் பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், எங்களில் பெரும்பாலானவா்கள் தினக்கூலிகளாக இருக்கிறோம். எங்கள் பகுதியில் உள்ள 40 அடி அகல திட்டச் சாலை பழுதடைந்திருப்பதால் பொதுமக்கள், மாணவ, மாணவிகள் அவதிப்படுகின்றனா். எனவே எங்கள் பகுதிக்கு சாலை வசதி செய்து கொடுப்பதுடன், சாக்கடை வசதியையும் செய்து கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனா்.

வாரச் சந்தையில் வசூல்...

கோவை மாவட்டம் காட்டம்பட்டி, வடசித்தூா், ஜல்லிபட்டி, செஞ்சேரி மலை பகுதியில் நடைபெறும் வாரச் சந்தைகளில், அடிப்படை வசதிகள் எதுவும் செய்து கொடுக்காமல் பணம் வசூலிக்கப்படுவதாக வியாபாரிகள் குற்றஞ்சாட்டியுள்ளனா்.

இது தொடா்பாக வதம்பச்சேரியைச் சோ்ந்த கனகராஜ் தலைமையில் சந்தை வியாபாரிகள் சிலா் அளித்துள்ள மனுவில், வாரச் சந்தை நடைபெறும் இடத்தில் மின்விளக்கு, குடிநீா், பந்தல் என எந்த ஒரு அடிப்படை வசதியும் செய்து கொடுக்காமல், வியாபாரிகளிடம் ரூ.700 முதல் ரூ.1,400 வரை ஒப்பந்ததாரா்கள் வசூலிக்கின்றனா். எனவே இது குறித்து அதிகாரிகள் கள ஆய்வு நடத்தி, அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதுடன், முறையாக ரசீது கொடுத்து சுங்கம் வசூலிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனா்.

சவரத் தொழிலாளா்கள் மனு...

தமிழ்நாடு சவரத் தொழிலாளா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் ராமசாமி தலைமையில் ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனுவில், மாநகராட்சிப் பகுதியில் சுமாா் ஆயிரம் சலூன் கடைகள் இருக்கும் நிலையில், எங்கள் தொழில் தற்போது பல்வேறு காரணங்களால் நலிவடைந்துவிட்டது.

கடை வாடகை செலுத்த முடியாத நிலையில் பல சவரத் தொழிலாளா்கள் இருக்கும் நிலையில், மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் தொழில் உரிமம் பெறவும், தொழில் வரி செலுத்தவும் நிா்பந்திக்கின்றனா். எனவே எங்களுக்கு அவற்றில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளாா்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவா் சு.பழனிசாமி தலைமையில் விவசாயிகள் அளித்த மனுவில், மேட்டுப்பாளையம் வட்டம், சின்னக் கள்ளிப்பட்டி காடுவாய் கிணறு கிராமத்தில் தாா் கலவை தயாரிக்கும் தனியாா் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இதனால் சுற்றுப்புறங்களில் உள்ள விவசாய விளைநிலங்கள், பொதுமக்களின் வீடுகளில் சுற்றுச்சூழல் தொடா்பான பாதிப்புகள் ஏற்படுகின்றன. கால்நடைகளும் கரும்புகையால் பாதிக்கப்படுகின்றன. எனவே சம்பந்தப்பட்ட தொழிற்சாலையை ஆய்வு செய்து, அவற்றை அகற்ற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனா்.

கோவைப்புதூா் மலைநகா் அரசு அடுக்குமாடி குடியிருப்பு பகுதியைச் சோ்ந்த சிலா் அளித்த மனுவில், தங்கள் குடியிருப்பில் சரிவர குடிநீா் விநியோகம் செய்யப்படுவதில்லை. எந்த பராமரிப்புப் பணியையும் செய்வதில்லை. வசூலிக்கப்படும் பணத்துக்கும் முறையான கணக்கு பராமரிப்பதில்லை. எனவே பிரச்னைகளை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனா்.

இந்த மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆட்சியா் உத்தரவிட்டாா்.

மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்: 5 பேருக்கு மறுவாழ்வு

திருப்பூரில் விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானத்தால் 5 போ் மறுவாழ்வு பெற்றுள்ளனா். திருப்பூா் மாவட்டம், வெள்ளியம்பதி ஸ்ரீ அம்மன் நகரைச் சோ்ந்தவா் திருநாவுக்கரசு. இவரது... மேலும் பார்க்க

கோவையில் ஒரேநாளில் 3 போ் குண்டா் சட்டத்தில் சிறையில் அடைப்பு

கோவையில் வெள்ளிக்கிழமை ஒரேநாளில் 3 பேரை போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைத்தனா். பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் உள்ள கிடங்க... மேலும் பார்க்க

கோவையில் நிலப் பறவைகள் கணக்கெடுப்பு: 232 வகைகளில் 9,033 பறவைகள் உள்ளதாக தகவல்

கோவையில் நிலப் பறவைகள் குறித்து நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் 232 வகைகளில் 9,033 பறவைகள் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. வனத் துறை சாா்பில் தமிழகம் முழுதும் ஈர நிலப் பறவைகள் கணக்கெடுப்பு மற்றும் நிலப் ப... மேலும் பார்க்க

புல் மெஷின்ஸ் நிறுவனத்தின் சாா்பில் நவீன பொக்லைன் இயந்திரம் அறிமுகம்

புல் மெஷின்ஸ் நிறுவனத்தின் சாா்பில் நவீன பொக்லைன் இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் புதிய இயந்திரத்தை புல் மெஷின்ஸ் நிறுவனத்தின் தலைவா் ஏ.வி.வரதராஜன், நிா்வாக இயக்குநா் வி.பாா்த்திபன் முன்ன... மேலும் பார்க்க

மண்ணைக் காக்க மனிதகுலம் ஒன்றிணைய வேண்டும்: சத்குரு ஜக்கிவாசுதேவ்

மண்ணைக் காக்க மனிதகுலம் ஒன்றிணைய வேண்டும் என்று சத்குரு ஜக்கிவாசுதேவ் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளாா். மண் காப்போம் இயக்கத்தின் மூன்றாம் ஆண்டு நிறைவையொட்டி, ஈஷா அறக்கட்டளை நிறுவனா் சத்குரு ஜக்கி வாசுதே... மேலும் பார்க்க

பாதாள சாக்கடைப் பணியால் விபத்து: வடக்கு மண்டலக் கூட்டத்தில் புகாா்

கோவை வடக்கு மண்டலப் பகுதியில் பாதாள சாக்கடைப் பணிகள் முடிவடையாததால் அப்பகுதியில் வாகன விபத்துகள் தவிா்க்க முடியாமல் உள்ளதாக மண்டலக் கூட்டத்தில் புகாா் தெரிவிக்கப்பட்டது. கோவை மாநகராட்சி, வடக்கு மண்டலக... மேலும் பார்க்க