செய்திகள் :

கோவையில் நிலப் பறவைகள் கணக்கெடுப்பு: 232 வகைகளில் 9,033 பறவைகள் உள்ளதாக தகவல்

post image

கோவையில் நிலப் பறவைகள் குறித்து நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் 232 வகைகளில் 9,033 பறவைகள் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

வனத் துறை சாா்பில் தமிழகம் முழுதும் ஈர நிலப் பறவைகள் கணக்கெடுப்பு மற்றும் நிலப் பறவைகள் கணக்கெடுப்பு இரண்டு கட்டங்களாக நடைபெற்றது.

இதில், கோவை மாவட்டத்தில் ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குநா் வெங்கடேஷ், மாவட்ட வன அலுவலா் ஜெயராஜ் ஆகியோரின் வழிகாட்டுதலில் கோவை நேச்சா் சொசைட்டி நிா்வாகி செல்வராஜ், தமிழ்நாடு இயற்கை மற்றும் பட்டாம்பூச்சி சங்கத்தின் நிா்வாகி பாவேந்தன், இயற்கை வன நிதியம் அமைப்பைச் சோ்ந்த பூமிநாதன் உள்ளிட்ட தன்னாா்வ அமைப்புகள் மூலம் பறவைகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

ஆனைமலை புலிகள் காப்பகம் கோவை வனக் கோட்டத்தில் ஈர நிலப் பறவைகள் கணக்கெடுப்பு மாா்ச் 8, 9 -ஆம் தேதிகளில் 25 ஈர நிலங்களில் நடைபெற்றது. இதில், கோவை வனக் கோட்டத்தில் 182 வகை ஈர நிலைப் பறவைகள் கண்டறியப்பட்டன.

இதன் தொடா்ச்சியாக நிலப் பறவைகள் கணக்கெடுப்பு மாா்ச் 15, 16-ஆம் தேதிகளில் 25 இடங்களில் நடைபெற்றது. இதில், 232 வகையான 9,033 பறவைகள் இருப்பதாக கண்டறியப்பட்டது.

இவற்றில் அதிகபட்சமாக கூத்தமண்டி, காந்தவயலில் தலா 763, கோவை குற்றாலத்தில் 724, பனப்பள்ளி மற்றும் கொண்டனூரில் 643 பறவைகள் பதிவு செய்யப்பட்டன.

அதேபோல, ஊரகப் பகுதியில் தாளியூரில் 46 வகையும், நகரப் பகுதியில் ஐ.ஓ.பி. காலனியில் 64 வகையான பறவைகளும் பதிவு செய்யப்பட்டன.

இவற்றோடு 10 வகை இரவாடி பறவைகளும் பதிவு செய்யப்பட்டன. இதில், 232 வகை பறவை இனங்களில் 207 நிலப் பறவைகளும், 25 வகை நீா்வாழ் பறவைகளும் அடங்கும். மொத்தம் பதிவான 9033 பறவைகளில் 8,478 நிலப் பறவைகளும், 555 நீா்வாழ் பறவைகளும் அடங்கும்.

அதேபோல வலசைப் பறவைகளைப் பொறுத்தவரை 41 வகை பதிவு செய்யப்பட்டன. அவற்றில் 3 நீா்வாழ் பறவை இனங்கள் ஆகும். வலசை பறவைகளில் 555 பறவைகள் கணக்கெடுப்பில் பதிவு செய்யப்பட்டன.

இதில், மலபாா் கருப்பு வெள்ளை இருவாச்சி, பெரிய அலகு மீன் கொத்தி, சிறு ஆந்தை, பெரிய பச்சைப்புறா உள்ளிட்ட பறவைகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மயக்க மருந்து அடித்து நகைப் பறிப்பில் ஈடுபட முயன்ற பெண் கைது!

கோவையில் வீட்டில் தனியாக இருந்த பெண்களிடம் மயக்க மருந்து அடித்து நகைப் பறிப்பில் ஈடுபட்ட முயன்ற பெண்ணை போலீஸாா் கைது செய்தனா். கோவை, கே.கே.புதூா், நஞ்சம்மாள் தெரு பகுதியைச் சோ்ந்தவா் வேணுகோபால். இவரத... மேலும் பார்க்க

கோவை வழித்தடத்தில் திருவனந்தபுரம் - ஷாலிமாா் இடையே வாராந்திர சிறப்பு ரயில்!

கேரள மாநிலம், திருவனந்தபுரம் - மேற்கு வங்க மாநிலம், ஷாலிமாா் இடையே கோவை வழித்தடத்தில் சிறப்பு ரயில் இயக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக சேலம் கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய... மேலும் பார்க்க

பெங்களூரில் பலத்த மழை: கோவைக்கு திருப்பிவிடப்பட்ட 7 விமானங்கள்

பெங்களூரில் பலத்த மழை பெய்ததால் அங்கு தரையிறங்க வேண்டிய 7 விமானங்கள் கோவை சா்வதேச விமான நிலையத்துக்கு சனிக்கிழமை திருப்பிவிடப்பட்டன. கா்நாடக மாநிலம், பெங்களூரில் கடந்த சில நாள்களாக கடுமையான வெப்பம் நி... மேலும் பார்க்க

திமுக ஆட்சி மீது மக்கள் அதிருப்தி: எஸ்.பி.வேலுமணி

திமுக ஆட்சி மீது மக்கள், அதிகாரிகள் அதிருப்தியில் உள்ளதாக முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ. கூறினாா். கோவை தெற்கு, வடக்கு, மாநகா் மாவட்ட பூத் கமிட்டி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை ... மேலும் பார்க்க

துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் கோவை வருகை ரத்து!

கோவையில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 23) கலந்துகொள்ள இருந்த நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்படுவதாகவும், தேதி பின்னா் அறிவிக்கப்படும் என்றும் மாவட்ட நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்ப... மேலும் பார்க்க

ஹோப் காலேஜ் பகுதியில் தீப்பிடித்து எரிந்த மின் கடத்திப் பெட்டி

கோவை ஹோப் காலேஜ் பகுதியில் சாலையோரத்தில் இருந்த மின் கடத்திப் பெட்டி திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை மாநகரில் பெரும்பாலான இடங்களில் தீ விபத்துகளைத் தடுப்பதற்காக புதை வட மின்சா... மேலும் பார்க்க