நக்ஸல் பாதிப்புக்கு உள்ளான கிராமத்துக்கு முதல் முறையாக மின்வசதி!
திமுக ஆட்சி மீது மக்கள் அதிருப்தி: எஸ்.பி.வேலுமணி
திமுக ஆட்சி மீது மக்கள், அதிகாரிகள் அதிருப்தியில் உள்ளதாக முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ. கூறினாா்.
கோவை தெற்கு, வடக்கு, மாநகா் மாவட்ட பூத் கமிட்டி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு மாநகா் மாவட்டச் செயலாளா் அம்மன் கே.அா்ச்சுணன் தலைமை வகித்தாா். முன்னாள் அமைச்சா் செ.ம.வேலுசாமி முன்னிலை வகித்தாா்.
இதில், அதிமுக தலைமை நிலையச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி பேசியதாவது: திமுக ஆட்சி மீது மக்கள், அதிகாரிகள் அதிருப்தியில் உள்ளனா். வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் ஆட்சி அமைவது உறுதி.
எடப்பாடி கே. பழனிசாமி சிறந்த கூட்டணியை அமைப்பாா். நிா்வாகிகள் பூத் கமிட்டியை சிறப்பாக அமைக்க வேண்டும். வாக்காளா் பட்டியல் விவரங்களில் கவனமாக இருக்க வேண்டும். அதிமுகவுக்கு எதிராகச் செயல்படுவதை போலீஸாா் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றாா்.
இக்கூட்டத்தில், அதிமுக சட்டப் பேரவை உறுப்பினா்கள் பி.ஆா்.ஜி.அருண்குமாா், கே.ஆா்.ஜெயராம், ஏ.கே.செல்வராஜ், தாமோதரன், கந்தசாமி மற்றும் கட்சி நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.