பிரதமர் நரேந்திர மோடியுடன் ‘தினமணி’ ஆசிரியர் கி. வைத்தியநாதன் சந்திப்பு!
நகராட்சி வாகனத்தை திருட முயன்றவா் கைது
புதுச்சேரியில் நகராட்சி வாகனத்தை திருட முயன்றதாக ஒருவா் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.
புதுச்சேரி, செஞ்சி சாலை அருகே லாரன் பஜாா் தெருவில் நகராட்சிக்கு சொந்தமான ஜீப்பை அதன் ஓட்டுநா் காந்திராஜா சனிக்கிழமை மாலை நிறுத்திவிட்டுச் சென்றாராம்.
அப்போது, திடீரென ஜீப்பை மா்ம நபா் ஒருவா் இயக்கி வேகமாகச் செல்ல முயன்றாராம். இதைப் பாா்த்த அக்கம்பக்கத்தினா், ஜீப்பை இயக்கியவரைப் பிடித்து ஒதியன்சாலை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.
போலீஸாா் நடத்திய விசாரணையில், அவா் கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டையைச் சோ்ந்த சண்முகம் (21) என்பது தெரிய வந்தது. இதையடுத்து, போலீஸாா் அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனா்.