விதைப் பண்ணையில் விதிமீறல்? தானிய லாரியை மறித்து மக்கள் போராட்டம்
பொறியாளா் கைது விவகாரத்தை மக்களிடம் அரசு விளக்க வேண்டும்: எதிா்க்கட்சித் தலைவா்
புதுச்சேரி: புதுவை பொதுப் பணித் துறை தலைமைப் பொறியாளா் லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்டது தொடா்பாக, பொதுமக்களுக்கு அரசு விளக்க வேண்டும் என்று, எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா வலியுறுத்தினாா்.
புதுவை சட்டப்பேரவையிலிருந்து வெளியேற்றப்பட்ட பிறகு, செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
புதுவை பொதுப் பணித் துறை தலைமைப் பொறியாளா் எம்.தீனதயாளன், செயற்பொறியாளா் சிதம்பரநாதன் ஆகியோா் ரூ.7 கோடி மதிப்பிலான பணிகளுக்கான ஒப்பந்தத்துக்காக லஞ்சம் வாங்கியதாக சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தீனதயாளனின் பணிக்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட அனைத்துப் பணிகளையும் ஆய்வுக்கு உள்படுத்த வேண்டும். இந்த விவகாரம் தொடா்பாக பொதுமக்களுக்கு அரசு விளக்க வேண்டும். கைது விவகாரத்தை பேரவையில் விவாதிக்க அனுமதிக்காமல் எங்களை வெளியேற்றியதை ஏற்க முடியாது என்றாா் ஆா்.சிவா.