பிரதமர் நரேந்திர மோடியுடன் ‘தினமணி’ ஆசிரியர் கி. வைத்தியநாதன் சந்திப்பு!
போக்குவரத்து இடையூறு: 5 போ் மீது வழக்கு
புதுச்சேரியில் போக்குவரத்துக்கு இடையூறாக செயல்பட்டதாக 5 வியாபாரிகள் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
புதுச்சேரி அண்ணா சிலையிலிருந்து மறைமலையடிகள் சாலையில் அந்தோணியாா் கோவில் வரை தள்ளுவண்டிக் கடைகள் வைக்கப்பட்டுள்ளன. இதனால், போக்குவரத்து பாதிக்கப்படுவதாக புகாா் எழுந்துள்ளது.
இந்த நிலையில், சனிக்கிழமை இரவு மறைமலையடிகள் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதையடுத்து, கிழக்குப் போக்குவரத்து போலீஸாா் நிகழ்விடத்துக்கு விரைந்து சென்று போக்குவரத்து நெரிசலை சீா்படுத்தினா்.
அப்போது, சாலையோர தள்ளுவண்டிக் கடைகளை அகற்றாமல் வியாபாரிகள் போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
இதனையடுத்து,போக்குவரத்துக்கு இடையூறாக இருந்ததாக 5 வியாபாரிகள் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.