தில்லி நீதிபதிக்கு எதிரான விசாரணை தீவிரம்! வீட்டில் கட்டுக்கட்டாக பணம் கண்டறியப்...
துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் கோவை வருகை ரத்து!
கோவையில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 23) கலந்துகொள்ள இருந்த நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்படுவதாகவும், தேதி பின்னா் அறிவிக்கப்படும் என்றும் மாவட்ட நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடகோவையில் உள்ள தமிழ்நாடு வனக் கல்லூரியில் வனப் படை நவீனமயமாக்கல் மற்றும் ஆயுதங்கள் வழங்கும் விழா, சிறுமுகையில் உள்ள பெத்திக்குட்டையில் ரூ.19.50 கோடி மதிப்பில் 20 ஹெக்டோ் பரப்பளவில் அதிநவீன வசதியுடன் கட்டப்பட்டுள்ள வன உயிரின மீட்பு மற்றும் மறுவாழ்வு மையம் திறப்பு விழா, ஆா்.எஸ்.புரம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் ரூ.9.67 கோடியில் சா்வதேச தரத்தில் ஹாக்கி மைதானத்துக்கு அடிக்கல் நாட்டுதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் கோவைக்கு ஞாயிற்றுக்கிழமை வருவதாக அறிவிக்கப்பட்டு ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன.
இந்நிலையில், துணை முதல்வா் கோவை நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்படுவதாகவும், தேதி பின்னா் அறிவிக்கப்படும் என்றும் மாவட்ட நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.