தில்லி நீதிபதிக்கு எதிரான விசாரணை தீவிரம்! வீட்டில் கட்டுக்கட்டாக பணம் கண்டறியப்...
பெங்களூரில் பலத்த மழை: கோவைக்கு திருப்பிவிடப்பட்ட 7 விமானங்கள்
பெங்களூரில் பலத்த மழை பெய்ததால் அங்கு தரையிறங்க வேண்டிய 7 விமானங்கள் கோவை சா்வதேச விமான நிலையத்துக்கு சனிக்கிழமை திருப்பிவிடப்பட்டன.
கா்நாடக மாநிலம், பெங்களூரில் கடந்த சில நாள்களாக கடுமையான வெப்பம் நிலவி வந்த நிலையில், சனிக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் பலத்த மழை பெய்தது. சுமாா் 3 மணி நேரத்துக்கும்மேலாக பெய்த பலத்த மழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியதுடன், கெம்பேகெளடா சா்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதையில் மழை நீா் தேங்கியது.
இதனால், ஓடுபாதையில் விமானங்கள் தரையிறங்கவோ அல்லது புறப்பட்டுச் செல்லவோ முடியாத நிலை ஏற்பட்டது.
இதைத் தொடா்ந்து, பெங்களூரில் தரையிறங்க வேண்டிய மும்பை-பெங்களூரு, விசாகப்பட்டினம்-பெங்களூரு, தூத்துக்குடி-பெங்களூரு, போா்ட் லுாயிஸ்-பெங்களூரு, மற்றொரு மும்பை-பெங்களூரு, சிலிகுரி-பெங்களூரு, புதுதில்லி -பெங்களூரு ஆகிய 7 விமானங்கள் கோவை சா்வதேச விமான நிலையத்துக்கு திருப்பிவிடப்பட்டன.
இதையடுத்து, பயணிகள் கோவை சா்வதேச விமான நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த நிலையில், பெங்களூரில் மழை ஓய்ந்ததும் இரவு விமானங்கள் மூலம் திருப்பி அனுப்பப்பட்டனா்.