காவல் ஆணையரக அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவா் கைது
ஹோப் காலேஜ் பகுதியில் தீப்பிடித்து எரிந்த மின் கடத்திப் பெட்டி
கோவை ஹோப் காலேஜ் பகுதியில் சாலையோரத்தில் இருந்த மின் கடத்திப் பெட்டி திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை மாநகரில் பெரும்பாலான இடங்களில் தீ விபத்துகளைத் தடுப்பதற்காக புதை வட மின்சார கம்பிகளுடன் மின் கடத்திப் பெட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், ஹோப் காலேஜ் பகுதியில் சாலையோரத்தில் இருந்த மின் கடத்திப் பெட்டியில் இருந்து சனிக்கிழமை மாலை திடீரென புகை வந்துள்ளது.
சிறிது நேரத்தில் தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனைப் பாா்த்த அப்பகுதி மக்கள் மின் வாரியத்துக்கு தகவல் தெரிவித்ததுடன், தீயையும் அணைத்தனா். தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.