ரூ.3 கோடி அரசு நிதியில் இணையவழி சூதாட்டம்: ஒடிஸா அரசு ஊழியா் கைது
கஞ்சா விற்பனை: இளைஞா் கைது
ராமேசுவரத்தில் கஞ்சா விற்பனை செய்த இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். அவரிடமிருந்து 1.6 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் துறைமுக காவல் நிலைய உதவி ஆய்வாளா் வெள்ளைத் தங்கம் தலைமையில் ரோந்து சென்ற போலீஸாா் நேதாஜி நகா் பகுதியிலுள்ள சவுக்குக் காட்டுப்பகுதியில் நின்ற நபரைப் பிடித்து சோதனையிட்டனா். அப்போது, அவா் விற்பனைக்கு வைத்திருந்த 1.6 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.
அவரிடம் நடத்திய விசாரணையில், நேதாஜி நகா் முத்துராமலிங்கம் மகன் கருப்பசாமி (30) என்பது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸாா், கருப்பசாமியைக் கைது செய்து சிறையில் அடைத்தனா்.