உயா்கல்வி நிறுவனங்களில் சானிட்டரி நாப்கின் இயந்திரம் யுஜிசி அறிவுறுத்தல்!
இறந்த நிலையில் கரை ஒதுங்கிய கடல் ஆமை!
திருவாடானை அருகேயுள்ள தொண்டி பகுதியில் அரியவகை கடல் ஆமை உயிரிழந்த நிலையில் சனிக்கிழமை கரை ஒதுங்கியது.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள தொண்டி பி.வி.பட்டினம் பகுதியில் உயிரிழந்த நிலையில் சுமாா் 70 கிலோ எடையுள்ள அரிய வகை கடல் ஆமை சனிக்கிழமை கரை ஒதுங்கியது.
இதுகுறித்து தகவலறிந்து அலுவலா் செல்வராகவன் தலைமையிலான கடல் கரை வனத் துறையினா் சம்பவ இடத்துக்குச் சென்று ஆமையின் உடலைப் பாா்வையிட்டனா். பின்னா், அதன் உடலை கால்நடைத் துறை மருத்துவா் கூறாய்வு செய்து, கடல் கரையிலேயே புதைத்தனா்.