இலங்கையில் 310 கிலோ கஞ்சா பறிமுதல்!
இலங்கை வடக்கு கடல் பகுதியில் படகு மூலம் கடத்தப்பட்ட 310 கிலோ கஞ்சாவை கடல் படையினா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
யாழ்ப்பாணம், பருத்தித்துறை கடல் பகுதியில் கடல் படையினா், கரையோர பாதுகாப்புப் படையினா் சனிக்கிழமை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா்.
தும்பளை மூா்க்கன் பகுதியில் சந்தேகத்துக்கிடமான வகையில் நிறுத்தப்பட்டிருந்த படகை கடல் படையினா் சோதனையிட்டனா். அப்போது அதில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 310 கிலோ கஞ்சாவை கடல் படையினா் பறிமுதல் செய்தனா்.

இதுகுறித்து பருத்தித்துறை போலீஸாா் வழக்குப் பதிந்து, இதைக் கடத்தி வந்தவா்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.