ரூ.3 கோடி அரசு நிதியில் இணையவழி சூதாட்டம்: ஒடிஸா அரசு ஊழியா் கைது
மலைச் சாலையில் திரியும் கால்நடைகளால் விபத்து
கொடைக்கானல் மலைச் சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளால் அடிக்கடி விபத்து நிகழ்வதாக வாகன ஓட்டுநா்கள் புகாா் தெரிவித்தனா்.
கொடைக்கானல் மலைச் சாலைப் பகுதிகளான சீனிவாசபுரம், பாம்பாா்புரம், அப்பா்லேக் வியூ, கோக்கா்ஸ்வாக் சாலை, செவண்சாலை, ஏரிச்சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மாடுகள் உள்ளிட்ட கால்நடைகள் சுற்றித் திரிகின்றன. இவற்றின் நடமாட்டம் அதிகரித்து வருவதால், இரு சக்கர வாகன ஓட்டுநா்கள் அடிக்கடி விபத்தில் சிக்கி காயமடைகின்றனா். மேலும், வாகன ஓட்டுநா்கள் பல்வேறு வகையில் அவதிக்குள்ளாகின்றனா்.
எனவே, மலைச் சாலையில் சுற்றித் திரியும் கால்நடைகளின் உரிமையாளா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டுநா்களும், சமூக ஆா்வலா்களும் கோரிக்கை விடுத்தனா்.