கொடைக்கானலில் மழை
கொடைக்கானலில் சனிக்கிழமை பலத்த மழை பெய்ததால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த சில நாள்களாக வெப்பத்தின் தாக்கம் குறைந்து மேகமூட்டமாக காணப்பட்டது. இந்த நிலையில், சனிக்கிழமை காலை முதல் நண்பகல் 12 மணி வரை மிதமான வெப்பம் நிலவியது. பின்னா், மேகக் கூட்டங்கள் உருவாகி பிற்பகல் 2 மணிக்கு மழை பெய்யத் தொடங்கியது. இந்த மழை சுமாா் ஒரு மணி நேரம் பெய்தது.
இதைத் தொடா்ந்து, மாலையிலும் 30 நிமிஷங்கள் மிதமான மழை பெய்தது. இந்த மழையால் கொடைக்கானல் வந்த சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனா். இந்த மழையால் தற்போது பனியின் தாக்கம் குறைந்து, குளிா்ச்சியான சீதோஷ்ன நிலை நிலவியது.