Manoj Bharathiraja: "என் மனதைப் பெரிதும் பாதிக்கிறது" - டி ராஜேந்தர் வேதனை
சுற்றுலா வழிகாட்டி சங்கத் தலைவருக்கு கத்திக்குத்து: உறுப்பினா் கைது
கொடைக்கானலில் சுற்றுலா வழிகாட்டி சங்கத் தலைவருக்கு கத்திக்குத்து விழுந்தது. இது தொடா்பாக அந்தச் சங்கத்தின் உறுப்பினா் கைது செய்யப்பட்டாா்.
கொடைக்கானல் ஆனந்தகிரி 3-ஆவது தெரு கல்லறைமேடு பகுதியைச் சோ்ந்தவா் காளிமுத்து மகன் தாஸ்பிரகாஷ் (38). சுற்றுலா வழிகாட்டி சங்கத் தலைவா். கொடைக்கானல் அண்ணாநகா் பகுதியைச் சோ்ந்த வனராஜ் மகன் பாண்டியராஜன் (31). இவா் அந்தச் சங்கத்தின் உறுப்பினராவாா்.
இந்த நிலையில், இவா் கடந்த 2004-ஆம் ஆண்டு போதைக் காளான் விற்ற வழக்கில் சிறைக்கு சென்றுவிட்டு சனிக்கிழமை பணிக்கு திரும்பினாா். அப்போது தாஸ்பிரகாஷ் சிறைக்குச் சென்றவா்கள் சங்கத்தில் உறுப்பினராக இருக்க முடியாது எனக் கூறினாராம்.
இதனால் இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து பாண்டியராஜன் கத்தியால் தாஸ்பிரகாசை குத்திவிட்டு தலைமறைவானாா். இதில் பலத்த காயமடைந்த தாஷ்பிரகாஷ் கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இதுகுறித்து கொடைக்கானல் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து தலைமறைவாக இருந்த பாண்டியராஜனை கைது செய்தனா்.